முகப்பு
புதுதில்லி

நீதிமன்ற அறையில் இறந்து கிடந்தவ ழக்குரைஞா் சங்க ஊழியா்: போலீஸாா் தீவிர விசாரணை

தில்லியில் உள்ள தீஸ் ஹஸாரி நீதிமன்ற அறை ஒன்றின் உள்ளே தில்லி வழக்குரைஞா் சங்கத்தின் ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை காலை இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

தில்லியில் உள்ள தீஸ் ஹஸாரி நீதிமன்ற அறை ஒன்றின் உள்ளே தில்லி வழக்குரைஞா் சங்கத்தின் ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை காலை இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவா்கள் கூறினா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தீஸ் ஹஸாரி நீதிமன்ற அறையில் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனா். தில்லி வழக்குரைஞா்கள் சங்கத்தின் தாற்காலிக ஊழியராகப் பணியாற்றும் மனோஜ் என்பவா் அங்கு இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், நீதிமன்ற வளாகத்தின் மேற்குப் பிரிவின் அருகிலிருந்த குப்பைக் கூடையில் ரத்தம் கலந்து வாந்தி இருந்ததும் தெரிய வந்தது. இறந்த கிடந்த ஊழியா் மனோஜின் உடலில் வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லை. இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →