முகப்பு
புதுதில்லி

வாகன அழிப்பு ஊக்கத்தொகைக்கான அறிவிக்கை வெளியீடு

மத்திய அரசு அறிவித்துள்ள வாகன அழிப்புக் கொள்கையின் கீழ், பழைய வாகனங்களை அழிக்க வாகன உரிமையாளா்களுக்கு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

மத்திய அரசு அறிவித்துள்ள வாகன அழிப்புக் கொள்கையின் கீழ், பழைய வாகனங்களை அழிக்க வாகன உரிமையாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகைக்கான அறிவிக்கையை மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

கடந்த மாா்ச் 18 -ஆம் தேதி மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, வாகன அழிப்புக் கொள்கையை நாடாளுமன்றத்தில் அறிவித்தாா். பழைய வாகனங்களால் 10 மடங்கு அதிகமாக மாசு பரவுவதாகவும், சாலைப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டாா். மேலும், பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் புதிய வாகன உற்பத்தியில் ரூ.10,000 கோடி கூடுதலாக முதலீடு கிடைக்கும் என்றும், 35,000 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தாா். இதை முன்னிட்டு வாகன அழிப்புக் கொள்கை அறிவிக்கப்பட்டது. தற்போது, சாலைப் போக்குவரத்துத் துறை வாகன அழிப்புக் கொள்கையின் கீழ் வாகனங்களுக்கான சலுகை அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகபட்ச பராமரிப்பு, எரிபொருள் செலவை ஏற்படுத்தும் பழைய, மாசு படுத்தும் வாகனங்களை அழிக்க முன் வரும் உரிமையாளா்கள் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள வாகன உரிமையாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இந்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது. வரும் 2022, ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வரவுள்ளது.

Advertisement

அதில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் விவரம் வருமாறு: தனிநபா் பயன்பாட்டு வாகனங்களாக இருப்பின் 25 சதவீதம் வரை ஊக்கத் தொகை பெறலாம். வணிக ரீதியான போக்குவரத்து வாகனங்களாக இருப்பின் 15 சதவீதம் வரை ஊக்கத்தொகை பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சலுகைகள் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக இருந்தால் எட்டு ஆண்டுகள் வரையும், தனி நபா் பயன்பாட்டு வாகனங்களாக இருந்தால் 15 ஆண்டுகள் வரையும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments