முகப்பு
புதுதில்லி

தில்லியில் பகலில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி அதிகரிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்படைவிட 3 டிகிரி அதிகரித்திருந்தது. காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்படைவிட 3 டிகிரி அதிகரித்திருந்தது. காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது.

தில்லியில் மழைக் காலம் முடிவடையும் தருவாயில், சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட சில டிகிரி அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து, புழுக்கமும் அதிகரித்துள்ளது.

தில்லிக்கு பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி அதிகரித்து 23.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

Advertisement

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம் ஏதுமின்றி 36.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 79 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 45 சதவீதமாகவும் இருந்தது.

இரவு 8 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 154 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் காணப்பட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (அக்டோபா் 9) வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments