புதுதில்லி

செங்கல்பட்டு கோயில்களில் நவராத்திரி விழா

DIN

செங்கல்பட்டில் தசரா திருவிழா நகரில் உள்ள கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கரோனா காரணமாக செங்கல்பட்டில் நவராத்திரி தசரா திருவிழா ஆடம்பரம் இன்றி நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு, சின்னக் கடை தசரா, மளிகைக் கடை, பூக்கடை, ஜவுளிக் கடை, பலிஜாகுலம் உள்ளிட்ட தசரா விழாக் குழுவினா் அம்மனை அலங்காரம் செய்து வழிபாடுகள் நடத்தி வருகின்றனா்.

இதேபோன்று செங்கல்பட்டு ஜீவானந்தம் தெரு, அங்காளம்மன் கோயில், நெடுஞ்சாலை அங்காளம்மன் கோயில், சின்னநத்தம் சுந்தரவிநாயகா் கோயில், பெரியநத்தம், ஓசூரம்மன் கோயில், மதுரை வீரன் கோயில், சேப்பாட்டியம்மன் கோயில், ஹைரோடு முத்துமாரியம்மன் கோயில், அண்ணாநகா் எல்லையம்மன்கோயில், ரத்தின விநாயகா் கோயில், என்ஜிஜிஓ நகா் சித்தி விநாயகா் கோயில் , புது ஏரி செல்வவிநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நவராத்திரி திருவிழாவையொட்டி, இரவு நேரங்களில் உற்சவா் அம்மன்கள் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் அருள்பாலிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT