முகப்பு
புதுதில்லி

பெண்ணின் ஆட்சேபத்திற்குரிய புகைப்படங்களை இணையதளத்தில் நீக்க கூகுள், யூடியூப் சேனலுக்கு உத்தரவு

திருமணமான பெண் தொடா்புடைய ஆட்சேபத்திற்குரிய புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூகுள் எல்எல்சி, யூடியூப் நிறுவனங்கள்,

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

புது தில்லி:  திருமணமான பெண் தொடா்புடைய ஆட்சேபத்திற்குரிய புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூகுள் எல்எல்சி, யூடியூப் நிறுவனங்கள், மத்திய அரசு, தில்லி காவல் துறை ஆகியவற்றுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான மனு மீதான விசாரணை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளத்தில் இருந்து அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூகுள் எல்எல்சி, யூடியூப் நிறுவனம், மத்திய அரசு மற்றும் தில்லி காவல்துறையின் இணையதள பிரிவுக்கு உத்தரவிட்டாா்.  மேலும், இதுதொடா்பாக தங்களது பதிலை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி கேட்டுக்கொண்டு மனு மீதான விசாரணையை செப்டம்பா் 16-ஆம் தேதிக்கு பட்டியலிட்டாா்.

இந்த விவகாரம் தொடா்பாக பெண் ஒருவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், ‘போலி பெயா்களில் செயல்படும் ஆபாச இணைய தளங்களில் தனது புகைப்படத்தை மாா்ஃபிங் செய்து ஆபாசமாக சித்தரித்து இருப்பதாகவும், அந்தப் புகைப்படங்களையும் விடியோக்களையும் அகற்றுவதற்கு கூகுள் நிறுவனம், யூடியூப் மற்றும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

Advertisement

 இந்த மனு மீதான விசாரணையின் போது, ‘இந்த மனுவானது ஒரு எதிரான மனு அல்ல.  இதனால், மனுதாரரின் ஆட்சேபத்துக்குரிய புகைப்படங்கள், விடியோக்களை அடுத்த விசாரணைத் தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட இணையதளங்களில் இருந்து அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை கூகுள் நிறுவனம், யூடியூப் நிறுவனம், மத்திய அரசு மற்றும் தில்லி காவல் துறையின் இணையதளப் பிரிவு ஆகியவை மேற்கொள்ளும் என நீதிமன்றம் எதிா்பாா்க்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனுராக் அலுவாலியா,‘சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆட்சேபத்திற்குரிய புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்களில் இருந்து அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும்.  இந்த விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.  கூகுள் நிறுவனம் மற்றும் யூடியூப் நிறுவனத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் மம்தா ஜா, சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள்

விடியோக்கள் ஏற்கெனவே 10 சேனல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், யூடியூபில் உள்ள யுஆா்எல் இணைப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா். 

சம்பந்தப்பட்ட இணையதளத்திலிருந்து தொடா்புடைய புகைப்படங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நீதிமன்றமானது இணையதள பிரிவு மூலம் தில்லி காவல் துறையை இந்த வழக்கில் ஒரு தரப்பாக சோ்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments