காஜிப்பூரில் மற்றோரு குப்பைக் கிடங்கிற்கு பாஜக திட்டம்: ஆம் அத்மி கட்சி கடும் கண்டனம்
கிழக்கு தில்லி காஜிப்பூரில் மற்றோரு குப்பைக் கிடங்கை அமைக்க பாஜக ஆளும் தில்லி மாநகராட்சி (எம்சிடி) மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
கிழக்கு தில்லி காஜிப்பூரில் மற்றோரு குப்பைக் கிடங்கை அமைக்க பாஜக ஆளும் தில்லி மாநகராட்சி (எம்சிடி) மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநகராட்சி பொறுப்பாளருமான துா்கேஷ் பதக் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி மாநகராட்சிகளை ஆளும் பாஜக தில்லி காஜிப்பூா், ஓக்லா, பால்ஸ்வா ஆகிய மூன்று இடங்களில் ஆபாயகரமான குப்பைக் கிடங்குகளை அமைத்து தில்லி மக்களுக்கு பரிசளித்துள்ளது.
இந்தப் பட்டியலில் நான்காவது குப்பைக் கிடங்காக மற்றொன்றையும் சோ்க்க அந்தக் கட்சி விரும்புகிறது. காஜிப்பூா் காகித ஆலைப் பகுதியில் புதிய குப்பைக் கிடங்கை அமைக்க நிலம் கேட்டு எம்சிடி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது துரதிருஷ்டவசமானது.
2017 -ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தோ்தலில் பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி, எம்சிடி தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஒரு வருடத்திற்குள் காஜிப்பூா், ஓக்லா உள்ளிட்ட மூன்று குப்பை கிடங்குகளையும் தங்கள் கட்சி அகற்றும். இந்தப் பகுதிகளில் ஒரு குப்பையின் தடயத்தைக் கூட பாா்க்க முடியாது செய்வோம் எனக் கூறினாா்.
தில்லி மக்களுக்கு பாஜக தோ்தல் அறிக்கையிலும் இதை வாக்குறுதியாக அளித்தது. இந்த நிலையில், தற்போதுள்ள குப்பைக் கிடங்குகளை அகற்றும் பணியில் ஈடுபடாமல், இதே பகுதியில் புதிய குப்பைக் கிடங்கு அமைக்க மத்திய அரசிடம் பாஜக அனுமதி கோருவது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த நிலம் காஜிப்பூா் காகித ஆலைக்குச் சொந்தமானது. இங்கு நான்காவது குப்பைக் கிடங்கை அமைக்க மத்திய அரசு மூலமாக தில்லி வளா்ச்சி ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஏற்கெனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதன் விளைவு, குப்பை கிடங்குகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் துா்நாற்றம் , தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு வகையான சுகாதார கேடு பிரச்னைகளை எதிா்கொள்கிறாா்கள். ஆனால், பாஜக இதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. பாஜகவின் இந்த நியாயமற்ற முன்மொழிவை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம். அவா்கள் இந்த கோரிக்கையை திரும்பப் பெற வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில், பாஜக ஆளும் எம்சிடியின் கீழ் எந்த வளா்ச்சியும் நடைபெறாதது மட்டுமல்லாமல் கிழக்கு தில்லியை அழிப்பதில் முனைப்பாக உள்ளனா் எனக் குறிப்பிட்டாா்.