முகப்பு
புதுச்சேரி

புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு!

புதுவையில் விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது பற்றி...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 6:41 AM
விஜய் பிரசாரம் (கோப்புப்படம்) - ANI
பகிர்:

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. பிரசாரத்துக்கு இன்னும் 6 நாள்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் மொத்தம் 28 தொகுதிகள் தமிழக வெற்றிக் கழகமும், 2 இடங்களில் அதன் கூட்டணிக் கட்சியும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள 23 இடங்களில் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், 19 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெறும் 4 இடங்களில் மட்டுமே பிரசாரத்துக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, அனுமதி அளிக்கப்பட்ட 4 இடங்களிலும் 2 மணி நேரத்துக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு, ஒரே ஒருமுறை தான் புதுச்சேரியில் விஜய் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அதுவும், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Permission Denied for Puducherry Vijay's Campaign in 19 Locations!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.