திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி!
திருப்பூரில் விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது பற்றி...
திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சாலைவலம் மற்றும் பிரசாரத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சாலைவலம் மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை நாளான நாளை (ஏப். 14) திருப்பூர் மாவட்டத்தில் விஜய்யின் சாலைவலம் மற்றும் பிரசாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை மாலை 4 மணியளவில் திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் பெருமாநல்லூரில் இருந்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரை விஜய் சாலைவலமாகச் செல்லவுள்ளார்.
இதையும் படிக்க : திருச்சி கிழக்கு... விஜய்யின் ஈர்ப்பு; திமுகவின் வியூகம்!
Permission Granted for Vijay's Roadshow and Campaign in Tiruppur Tomorrow!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.