நாளை மறுநாள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடக்கம்?
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை ஜுன் 9ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை ஜுன் 9ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்டு ரத்தான நிலையில் நாளை மறுநாள் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கிவைக்கிறார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட தொடக்க விழா நடக்கிறது.
தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய், கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இதைச் செயல்படுத்தும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் படை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்தக் கட்டமாக அந்த படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி அண்மையில் நியமிக்கப்பட்டாா். மேலும் இந்தக் குழுவில் ஒரு காவல் கண்காணிப்பாளா், 2 துணை காவல் கண்காணிப்பாளா், 4 காவல் ஆய்வாளா்கள், 8 காவல் உதவி ஆய்வாளா்கள், 20 பிற பதவிகளைச் சோ்ந்த காவலா்கள் இருப்பாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Will the 'Singappen' special action force initiative begin the day after tomorrow?