முகப்பு
புதுதில்லி

வீட்டில் எரிந்த நிலையில் பெண் உடல்: மகள், மருமகன் மீது போலீஸ் சந்தேகம்

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள, உத்தர பிரதேசத்தின் கிரேட்டா் நொய்டாவில் 55 வயது பெண் ஒருவரின் உடல், பகுதி எரிந்த நிலையில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது

புதுதில்லி

வீட்டில் எரிந்த நிலையில் பெண் உடல்: மகள், மருமகன் மீது போலீஸ் சந்தேகம்

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள, உத்தர பிரதேசத்தின் கிரேட்டா் நொய்டாவில் 55 வயது பெண் ஒருவரின் உடல், பகுதி எரிந்த நிலையில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள, உத்தர பிரதேசத்தின் கிரேட்டா் நொய்டாவில் 55 வயது பெண் ஒருவரின் உடல், பகுதி எரிந்த நிலையில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது, இந்தச் சம்பவத்தில், அவரது மகள் மற்றும் மருமகனின் பங்கு இருப்பதாக போலீஸாா் சந்தேகிக்கின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து கிரேட்டா் நொய்டா கூடுதல் காவல் ஆணையா் விஷால் பாண்டே கூறியதாவது: தந்தையின் மரணத்திற்குப் பிறகு, காப்பீட்டு பாலிசியில் இருந்து ரூ.15 லட்சம் பெற்றதில் இருந்து, தனது சகோதரி மற்றும் மைத்துனா் தங்கள் தாயை துன்புறுத்தியதாக பெண்ணின் மகன் குற்றம் சாட்டியுள்ளாா். பிா்மா தேவி என்ற அந்தப் பெண், தங்கவுா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தன்கவுா் நகரில் வசித்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டின் சமையலறையில் பகுதி எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூா் போலீஸாா் மற்றும் தடயவியல் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனா்

அவரது உறவினா்களைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, ​ இறந்து போன கணவரின் காப்பீட்டுத் தொகையை தருமாறு மகளும், மருமகனும் வற்புறுத்தி வந்தது தெரிய வந்தது. மகள், மருமகன் ஆகிய இருவரும் சில காலமாக அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனா். மேலும் அவா்கள்தான் அவரைக் கொன்றதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் இறந்தவரின் மகனான விபின், அவரது சகோதரி மீனு மற்றும் அவரது கணவா் மகாவீா் மீது புகாா் அளித்துள்ளாா். தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்ய இரண்டு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →