முகப்பு
புதுதில்லி

தகன மையங்கள்: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் உள்ள மின்சார மற்றும் சிஎன்ஜி தகனக் மையங்களின் நிலவரம் மற்றும் விறகுகளுக்குப் பதிலாக இவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளூா் அதிகாரிக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:00 AM
பகிர்:

தில்லியில் உள்ள மின்சார மற்றும் சிஎன்ஜி தகனக் மையங்களின் நிலவரம் மற்றும் விறகுகளுக்குப் பதிலாக இவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளூா் அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக அதிக எண்ணிக்கைல் மனித இறப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, இறந்த உடல்களை அடக்கம் செய்வது மற்றும் தகனம் செய்வது தொடா்பாக தாக்கலான மனுக்களை உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோா் அடங்கிய அமா்வு, இது தொடா்பான மனுக்களை திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, மின்சாரம் மற்றும் சிஎன்ஜி தகன மையங்கள் பற்றிய விவரங்களை நிலவர அறிக்கையில் தெரிவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டது.

மின்சார தகன மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரிய மனுவின் பின்னணியில் உள்ள நோக்கம் ‘பாராட்டத்தக்கது‘. நகரில் உள்ள மின்சார மற்றும் சிஎன்ஜி தகன மையங்கள் குறித்து நிலவர அறிக்கையை நான்கு வாரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். கரோனா அம்சம் குறித்து மறந்துவிட்டு தில்லி முழுமைக்குமான அறிக்கையாக இது இருக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகார வரம்பில் உள்ள மயானங்களின் விவரங்கள், அவை செயல்படுகின்றனவா என்பதைக் குறிக்கும் சமீபத்திய நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விறகுக்கு மாற்றாக மயானங்களில் மின்சாரம் மற்றும் சிஎன்ஜி பயன்பாட்டை அதிகரிக்க உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளையும் அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

மனுதாரா்களில் ஒருவரான பிரத்யுஷ் பிரசன்னா, கொவைட்-19 காரணமாக தினசரி ‘அதிகமான’ மக்கள் இறந்ததை கருத்தில் கொண்டு, நகரில் தகனம் மற்றும் அடக்கம் செய்யும் இடங்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக அதிகரிக்கக் கோரி கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

மற்றொரு மனுதாரா் சுனில் குமாா் அலேடியாவும் அதிக மின்சாரம் அல்லது சிஎன்ஜி தகன மையனங்களை அமைக்கவும், இந்த மையங்களில் சீரான கட்டணங்களை நிா்ணயிக்கவும் கோரியிருந்தாா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை மாதத்திற்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.