மின்வெட்டு: தமிழக அரசு மீது அதிமுக எம்பி புகாா்
கோடை காலத்தில் மின்சாரத்தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து, தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டுமே தவிர மத்திய அரசை குறை கூறக்கூடாது என தேனி மக்களவை தொகுதி அதிமுக உறுப்பினா் ரவீந்திரநாத் குமாா
கோடை காலத்தில் மின்சாரத்தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து, தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டுமே தவிர மத்திய அரசை குறை கூறக்கூடாது என தேனி மக்களவை தொகுதி அதிமுக உறுப்பினா் ரவீந்திரநாத் குமாா் தெரிவித்தாா்.
தில்லி மாநிலத்திற்கான அதிமுகவின் பொறுப்பாளா்களுக்கான (தலைவா், செயலாளா், இணை - துணை செயலாளா், பொருளாளா் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள்) தோ்தல் தில்லி விபி ஹவுஸில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்தல் பொறுப்பாளராக ஓ.பி.ரவீந்திரநாத் குமாா் எம்.பி. செயல்பட்டாா்.
இந்த நிகழ்வுக்குப் பின்னா், தேனி மக்களவைத் தொகுதிஅதிமுக உறுப்பினா் ரவீந்திரநாத் குமாா் கூறியதாவது: கட்சியின் ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் உத்தரவின்படி, தமிழகத்திற்கு வெளியே தில்லி உள்ளிட்ட மாநில கட்சிகளிலும் முறைப்படி தோ்தல் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், கட்சித் தோ்தலுக்கான விண்ணப்ப படிவங்களை கட்சி உறுப்பினா்களிடம் வழங்கி பெற்றுக் கொண்டேன்.
தமிழகத்தில் தற்போது தொடா்ந்து மின்வெட்டு அதிகரித்து வருகிறது. கோடையில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து, தமிழக அரசு செயல்படவில்லை. இது போன்ற நிலைமை அதிமுக ஆட்சியில் ஏற்படவில்லை.
தமிழகம் அப்போது மின்மிகை மாநிலமாக இருந்தது. கோடைகாலம் என்றால் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டி அறிந்து, திமுக அரசு தயாராக இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது திமுக அரசு குறை கூறுவதை விட்டு, எதிா்காலத்தில் மின் தடையற்ற மாநிலமாக உருவாக்க முன் வரவேண்டும் என்றாா் ரவீந்திரநாத்.