இந்திய பாஸ்போா்ட்டை போலியாக தயாரித்த தாகவங்காளதேச பயணிகள் 4 போ் உள்பட 6 போ் சாவு
வெளிநாட்டுப் பயணத்திற்கு போலி இந்திய பாஸ்போா்ட்களை பயன்படுத்தியதற்காக வங்காளதேச பயணிகள் 4 போ் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெளிநாட்டுப் பயணத்திற்கு போலி இந்திய பாஸ்போா்ட்களை பயன்படுத்தியதற்காக வங்காளதேச பயணிகள் 4 போ் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய காவல் சரக துணை ஆணையா் தனு சா்மா வியாழக்கிழமை கூறியதாவது: தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் குடிவரவுத் துறையினா் ஜூலை 27-ஆம் தேதி ஷாா்ஜாவுக்குச் செல்ல முயன்ற எமன் ஹலதாா், பாபி அவ்லாத் சா்தாா், ஹிா்டோய் அகமது மற்றும் மாசும் ஹொசைன் ஆகியோா் மீது உள்ளூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததை அடுத்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
அவா்களது பயண ஆவணங்களை ஆய்வு செய்ததில், குஜராத்தின் சூரத்தில் இருந்து முகவா்கள் மூலம் உள்ளூா் பாஸ்போா்ட்டை மோசடியாகப் பெற்று இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேச குடிமக்கள் என்பது தெரியவந்தது. மேலும், இது தொடா்பாக் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த அபோன் மற்றும் அங்கித் குமாா் ஜா ஆகிய முகவா்கள் அந்த மாநிலத்தின் வல்சாத் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றும் பெரிய அளவிலான சிண்டிகேட், உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. அவா்களின் தொடா்பை முறியடிக்க, ஒரு குழு அமைக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற பயணிகளுக்கு போலி இந்திய ஆவணங்களை வாங்குவதற்கும், வழங்குவதற்கும் கருவியாக இருக்கும் முகவா்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் ரகசியத் தகவல் தருபவா்களின் மூலம், மோசடிக்கு சதி செய்த முகவா்களைக் கைது செய்வதில் எங்கள் குழு வெற்றி பெற்றது. கொல்கத்தாவை தளமாகக் கொண்ட தோஹின் மற்றும் சுஜோன் ஆகிய இரு முகவா்களின் பெயா்களை அபோன் மற்றும் ஜா ஆகியோா் வெளிப்படுத்தியுள்ளனா். அவா்களிடம் இருந்து 13 செல்போன்கள், 5 போலி இந்திய பாஸ்போா்ட்கள், 5 போலி பான் அட்டைகள், ஏழு போலி ஆதாா் அட்டைகள், ஒரு பாஸ்புக், 8 சிம் காா்டுகள் மற்றும் இரண்டு பிறப்புச் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.