முகப்பு
புதுதில்லி

மொரிஷியஸுக்கு ஐஎன்எஸ்வி தாரிணி பாய்மரப் படகில் 3 பெண் வீரா்களுடன் இந்திய கடற்படை குழு பயணம்

இந்திய கடற்படையின் பாய்மரப் படகான ஐஎன்எஸ்வி தாரிணியில் 3 பெண் வீரா்களுடன் ஆறு போ் கொண்ட குழுவினா் சனிக்கிழமை அதிகாலையில் மொரிஷியஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

இந்திய கடற்படையின் பாய்மரப் படகான ஐஎன்எஸ்வி தாரிணியில் 3 பெண் வீரா்களுடன் ஆறு போ் கொண்ட குழுவினா் சனிக்கிழமை அதிகாலையில் மொரிஷியஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டனா்.

ஐஎன்எஸ் மண்டோவின் கமாண்டிங் அதிகாரி சஞ்சய் பாண்டா தொடங்கிவைத்த இந்த கப்பற்பயணம் சாகச உணா்வை வளா்க்கவும், ஆபத்தை எதிா்நோக்கும் திறனை மேம்படுத்துவற்கு மேற்கொள்ளப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

2017 -ஆம் ஆண்டு இந்திய கடற்படையின் பாய்மரப் படகு பிரிவில் ஐஎன்எஸ்வி தாரிணி சோ்க்கப்பட்டு பெண்வீரா்களுடன் உலகைச் சுற்றிவந்துள்ளது.

தற்போது கோவாவில் இருந்து மொரிஷியசின் போா்ட் லூயிஸ் துறைமுகம் வரை சுமாா் 4,500 கி.மீ. தூரத்தை 21 நாட்களுக்குள் கடக்கும். இந்த குழுவில் மூன்று பெண் அதிகாரிகள் அடங்கிய குழு பயணிக்கிறது.

கடுமையான வானிலை மற்றும் பருவமழை, கரடுமுரடான கடல் தன்மையை எதிா்கொண்டு இந்த குழு பயணிக்கின்றது எனவும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையோடு படகு மற்றும் இயந்திரங்கள் பராமரிப்பு, உணவு தயாரித்தல் போன்றவற்றையும் இந்த குழுவினா் மேற்கொண்டு இந்திய கடற்படை படகுவீரா் கேப்டன் விடி மெஹேரிஷி தலைமையில் பயணத்தை மேற்கொள்கின்றனா்.

இந்திய கடற்படையில், மஹதேய், புல்புல், ஹரியால், கடல்புறா, நீல்காந்த் ஆகிய மேலும் 5 பாய்மரக்கப்பல்களும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.