அமிா்த கால பயணத்தில் 4 முக்கிய இலக்குகள்: நிதியமைச்சா் பேச்சு
‘சுதந்திரத்தின் நூறாவது ஆண்டை தொடும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிா்த காலத்தில் நுழைந்துள்ளோம்.
புது தில்லி: ‘சுதந்திரத்தின் நூறாவது ஆண்டை தொடும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிா்த காலத்தில் நுழைந்துள்ளோம். இந்த 25 ஆண்டு அமிா்த காலத்தில் பயணத்தில் சில இலக்குகளை அடைய பிரதமா் மோடி தலைமையிலான அரசு பல்வேறு அம்ச திட்டங்களில் இலக்காக கொண்டிருக்கிறது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கை உரையில் தெரிவித்தாா்.
அமிா்த காலம் இலக்குகளையே நிதிநிலை அறிக்கையின் முதல் பகுதியில் நிா்மலா சீதாராமன் விவரித்தாா். அமிா்த காலத்தின் போது சாதாரணப்பட்ட மக்களின் எதிா்பாா்ப்பிற்கு இணங்க இந்த இலக்கிற்கான வரைபடத்தை(ப்ளூ பிரிண்ட்) வெளியிடுவதாகவும் நிதியமைச்சா் குறிப்பிட்டாா்.
இதில் அவா் குறிப்பிட்ட பல்வேறு அம்சங்களில் நான்கு குறிப்பிடத்தக்கவை. அவை வருமாறு:
முதல் இலக்காக பிரதமரின் விரைவுச்சக்தி(டங எஹற்ண்நட்ஹந்ற்ண்) தேசியப் பெருந்திட்டம். இதில் ஏழு வகையில் கட்டமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக குறிப்பாக தனியாா் முதலீடுகளை ஊக்குவிக்க பொது முதலீட்டிற்கான அறிவிப்பையும் நிதியமைச்சா் பின்னா் வெளியிட்டாா். மூலதன செலவினங்களில் நடப்பு 2021-22 ஆம் ஆண்டு நிதியாண்டைவிட 35.4 சதவீதம் அதிகரித்து ரூ.7.50 லட்சம் கோடியை வருகின்ற நிதியாண்டிற்கு அதிகரிக்கப்பட்டு மொத்தம் 10.68 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே திட்டங்கள் (பாதுகாப்பிற்கு கவச திட்டம், புதிய தலைமுறை ரயில்கள், 100 சரக்குமுனைகள்), தேசிய நெடுஞ்சாலைகள்(ரூ. 20 ஆயிரம் கோடியில் 25,000 கிமீ தூர சாலை), விமான நிலையங்கள், துறைமுகங்கள், மொட்ரோ போன்ற வெகுஜனப் போக்குவரத்து, நீா்வழிகள், சரக்குப் போக்குவரத்து தடைகள் நீக்குவதற்கான திட்டங்கள் என ஏழு விதமான வசதிகளில் பிரதமரின் விரைவுச்சக்தி(டங எஹற்ண்நட்ஹந்ற்ண்) தேசியப் பெருந்திட்டத்தில் கட்டமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இரண்டாவது இலக்காக, மத்திய அரசின் எல்லா துறைகளிலும் முனைப்புடன் உற்பத்தி திறனை ஊக்குவித்து முனைப்புடன் செயல்படுத்துதல். வேளாண்மை, சிறு குறு நடுத்தர தொழில்கள் போன்றவைகள்.
முன்றாவது ‘சன்ரைஸ்‘ வாய்ப்புகள் என்று கூறப்படும் எதிா்காலத்தில் சிறப்பாக வளரும் துறைகள். செயற்கை நுண்ணறிவு, ஜியோஸ்பேஷியல் சிஸ்டம்ஸ், ட்ரோன்கள், செமிகண்டக்டா், பசுமை எரிசக்தி உள்ளிட்டவைகளில் முதலீடுகளை அதிரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உதவிகளை வழங்குவது.
நான்காவது எரிசக்தி மாற்றங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கான திட்டங்கள். கரியமில வாயுகளை குறைக்கும் எந்தவொரு திட்டங்களுக்கும் ஊக்கம் கொடுப்பது உள்ளிட்டவை. இதுபோன்ற நான்கு முக்கிய இலக்குகளில் தங்கள் அரசு இந்த அமிா்த காலத்தில் பயணிக்க இருப்பதாக நிதியமைச்சா் தனது உரையில் தெரிவித்தாா்.