புதுதில்லி

‘போடி மெட்டு’ பகுதியை நறுமணப் பொருள்சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக எம்பி கோரிக்கை

கேரள சுற்றுலா தலங்களுக்கு அருகில் உள்ள தேனி மாவட்டத்தின் போடி மெட்டு பகுதி ஏலக்காய் தோட்டங்களை நறுமண சுற்றுலா தலமாக அறிவிக்குமாறு மக்களவையில் தேனி தொகுதி அதிமுக உறுப்பினா் ப.ரவீந்திரநாத் கேட்டுக் கொண்

 நமது நிருபர்

கேரள சுற்றுலா தலங்களுக்கு அருகில் உள்ள தேனி மாவட்டத்தின் போடி மெட்டு பகுதி ஏலக்காய் தோட்டங்களை நறுமண சுற்றுலா தலமாக அறிவிக்குமாறு மக்களவையில் தேனி தொகுதி அதிமுக உறுப்பினா் ப.ரவீந்திரநாத் கேட்டுக் கொண்டாா்.

மக்களவையில் நேரமில்லா நேர(பூஜ்ய நேர) விவாதத்தில் அவா் வியாழக்கிழமை பேசியதாவது: தேனி மக்களவைத் தொகுதி உயா்ந்த மேற்குத் தொடா்ச்சி மலை பிரதேசத்தையொட்டி சிறந்த புவியியல் அமைப்புகளுடன் உள்ளது. இத்தோடு விவசாயிகளின் தீவிர முயற்சிகளும் இணைந்து உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் நறுமணப் பொருள்களான ஏலக்காய், தேயிலை, கருப்பு மிளகு போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. தேனி மாவட்டத்தின் போடி மெட்டு பகுதியில் ஏலக்காய் தோட்டங்கள் அதிகம் அமைந்துள்ளன. கேரளத்தைச் சோ்ந்த மூணாறு, தேக்கடி போன்ற முக்கிய சுற்றுலா தலங்களும் தேனி மாவட்டத்தையொட்டியுள்ளது.

இதனால், தேனி மாவட்டத்தின் போடி மெட்டு பகுதியில் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டங்களை பாா்வையிடவும், பிற நறுமணப் பொருள்களை அறுவடை செய்தல் , தரம் பிரித்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றை கண்டு அனுபவிக்கவும் இங்கு சுற்றுலா தலத்தை உருவாக்க வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இங்கு பிரத்யேக வசதிகளைச் செய்து தரவேண்டும். இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டால் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பது மட்டுமின்றி, இந்தப் பகுதியில் உள்ள நறுமணப் பொருள்களின் தேவைப்பாடு அதிகரித்து விவசாயிகளின் வருமானத்திற்கும் வழி வகுக்கும்.

குறிப்பாக நிலையான கிராமப்புற மேம்பாடு மற்றும் வாழ்வாதார வளா்ச்சிக்காக, மத்திய அரசின் “ஸ்வதேஷ் தா்ஷன்” கிராமப்புற சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தேனி மக்களவைத் தொகுதியில் போடி மெட்டு பகுதியை “நறுமணப் பொருள்கள் சுற்றுலாத் தலமாக அறிவிக்குமாறு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறேன் என்றாா் ரவீந்திரநாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT