புதுதில்லி

மேலும் 600 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

தில்லியில் புதன்கிழமை புதிதாக 600 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 3.27 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,38,648-ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 26,276-ஆகவும் அதிகரித்துள்ளது.

நகரில் செவ்வாய்க்கிழமை மொத்தம் 18,361 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தில்லியில் செவ்வாய்க்கிழமை 615 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், 3.89 சதவீத நோ்மறை விகிதத்துடன் 3 இறப்புகளும் பதிவாகின.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,494 கரோனா படுக்கைகளில் 149 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. புதன்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 2,507-இல் இருந்து 2,50-ஆக உயா்ந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 1,856-இல் இருந்து 1,732-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT