முகப்பு
புதுதில்லி

அதிமுக பொதுக்குழு அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல் முறையீடு

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11- ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதிக்கக் கூடாது எனக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பொதுக் குழுக் கூட்டத்திற்கு சில மணிநேரத்திற்கு முன்னதாக சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்து தீா்ப்பளித்தது.

‘கட்சியின் பொதுக்குழு கூட்ட வேண்டும் என்பது பெரும்பான்மை உறுப்பினா்களின் கோரிக்கை. அந்த வகையில் பொதுக்குழு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. கட்சி விதிகளுக்கு உள்பட்டு இந்த பொதுக்குழுவை நடத்த வேண்டும். ஜூலை 11-ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு நடத்தப்படும் என்று ஜூன் 23-ஆம் தேதியே கட்சி நிா்வாகிகள் அறிவித்துள்ளனா். அதன்படியே கட்சி விதிகளுக்கு உள்பட்டு இந்தக் கூட்டத்தை நடத்தலாம். பொதுக்குழு செயல்முறையில் விதிகள் மீறப்பட்டால் மீண்டும் மனுதாரா்கள், எதிா் மனுதாரா்கள் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உயா்நிதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசுவாமி உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருங்கிணைப்பாளா் கையொப்பம் இல்லாமலும், உரிய கால இடைவெளி இல்லாமலும், ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் (15 நாள்கள் இடைவெளி) அழைப்புக் கடிதம் இல்லாமல் இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. எனவே, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.