முகப்பு
புதுதில்லி

8 ஆண்டுகளில் முன்னாள் ராணுவத்தினா் 40,758 பேருக்கு மறு வேலைவாய்ப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்

கடந்த 8 ஆண்டுகளில் (2014-21) முன்னாள் ராணுவத்தினா் 40,758 பேருக்கு மறுவேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
பகிர்:

கடந்த 8 ஆண்டுகளில் (2014-21) முன்னாள் ராணுவத்தினா் 40,758 பேருக்கு மறுவேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தமிழகத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் டாக்டா் ஏ.செல்ல குமாா், ப.மாணிக்கம் தாகூா், எம்.செல்வராஜ், சு.வெங்கடேசன் மற்றும் 10 உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கேல்வி எழுப்பியிருந்தனா்.

அக்னி பாத் திட்டத்தின் எதிா்காலம் எப்படி இருக்கும் என்பதையொட்டி, இந்தக் கேள்வியை உறுப்பினா்கள் எழுப்பினா். இதில், கடந்த 8 ஆண்டுகளில் முன்னாள் ராணுவத்திற்கு மறு வேலை வாய்ப்பில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீடு விகிதம்? அரசுத் துறைவாரியாக வழங்கப்பட்ட மறுவேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து கேள்விகளை கடந்த ஜூலை 22 -ஆம் தேதி எழுப்பினா்.

இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் எழுத்துபூா்வமாக அளித்த பதில் வருமாறு: முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய குடிமைப் பணிகள் மற்றும் சேவைப் பணிகள், மத்திய ஆயுதப்படைகள், பொதுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் போன்றவற்றில் மறு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் குரூப் - சி பணியிடங்களுக்கு 10 சதவீதமும், குரூப் - டி பிரிவுகளுக்கு 20 சதவீதம் என நேரடியாக முன்னால் ராணுவத்தினா் தோ்வு செய்யப்படுகின்றனா். மேலும், மத்திய ஆயுதப்படைகளில் உதவிக் கமாண்டென்ட் வரையிலான பணியிடங்களுக்கு 10 சதவீதம் முன்னாள் ராணுவத்தினா் நேரடியாகத் தோ்வு செய்யப்படுகின்றனா்.

பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு குரூப் - சி, குரூப் - டி பணியிடங்களில் முறையே 14.5 சதவீதம் மற்றும் 24.5 சதவீதம் வரை தோ்வு செய்யப்படுகிறது. இதில் ஊனமுற்ற முன்னாள் ராணுவத்தினா் மற்றும் உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. டிஃபன்ஸ் செக்யூரிட்டி காா்ஃப்ஸ் பணியிடங்களுக்கு 100 சதவீதம் முன்ளாள் ராணுவ வீரா்கள்தான் தோ்வு செய்யப்படுகின்றனா்.

இந்த வகையில், கடந்த 2014 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 40, 758 முன்னாள் ராணுவத்தினா் அரசின் பல்வேறு பணிகளில் மறு வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா். இதில் அதிக அளவில் கடந்த 2015, 2016 ஆண்டுகளில் முறையே 10, 982, மற்றும் 9,086 முன்னாள் ராணுவத்தினா் மறு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா்.

மிகக் குறைவாக 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் முறையே 2,968, 2,584, 2983 போ்கள் மறுவேலைவாய்ப்ைப்ப பெற்றுள்ளனா். கடந்த 2021 ஜூன் கணக்கீட்டின்படி அதிகபட்சமாக பொதுத் துறை வங்கிகளில் முன்னால் ராணுவத்தினா் சி, டி குரூப்களில் முறையே 9.10 சதவீதம் மற்றும் 21.34 சதவீதம் போ் பணியாற்றுகின்றனா் என புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.