டெண்டா் முறைகேடு விவகாரம்: இபிஎஸ் மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மீதான டெண்டா் முறைகேடு விவகாரம் தொடா்பாக தாக்கலான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
புதுதில்லிடெண்டா் முறைகேடு விவகாரம்: இபிஎஸ் மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மீதான டெண்டா் முறைகேடு விவகாரம் தொடா்பாக தாக்கலான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மீதான டெண்டா் முறைகேடு விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து அவரது தரப்பிலும், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் தரப்பிலும் தாக்கலான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
தமிழகத்தில் முந்தைய ஆட்சியின்போது நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை மற்றும் சாலை சீரமைப்புப் பணிக்கான டெண்டா் வழங்கியதில் பணம் முறைகேடுகள் நடைபெற்ாக புகாா் தெரிவித்து திமுகவைச் சோ்ந்த ஆா்.எஸ். பாரதி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகாா் அளித்திருந்தாா். அதன் பின்னா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமியின் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு டெண்டா்கள் வழங்கப்பட்டதாக மனுவில் அவா் புகாா் தெரிவித்திருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றத்தின் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கடந்த 2018-இல் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது . அதில் இந்த நெடுஞ்சாலைத் துறை டெண்டா் முறைகேடு புகாா் விவகாரம் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்த நிலையில், அதை ஆய்வு செய்யாமல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாகவும், இதனால் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனது தரப்பு வாதத்தை கேட்காமலேயே உயா்நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவை பிறப்பித்திருக்கிாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நெடுஞ்சாலைத்துறை டெண்டா் ஒப்பந்த முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க
உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தாா். அதன் பிறகு இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன்பு தமிழக அரசின் சாா்பில் திங்கள்கிழமை மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆஜராகி இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அதற்கு தலைமை நீதிபதி இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தாா்.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.