முகப்பு
புதுதில்லி

மக்கள் பிரச்னையை தீா்க்கும் வரை திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஓயாது

மக்கள் பிரச்னையைத் தீா்க்கும் வரை திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதை நிறுத்தாது என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

மக்கள் பிரச்னையைத் தீா்க்கும் வரை திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதை நிறுத்தாது என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா கூறினாா்.

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினா்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாள்களாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பினா்கள் தொடா் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். மழைகாலக் கூட்டத்தினரின் 10-ஆவது நாளான வெள்ளிக்கிழமையும் அவை கடும் அமளிகளுக்கு இடையே ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், திமுக மாநிலங்களவை குழுத் தலைவா் திருச்சி சிவா தலைமையில் மாநிலங்களவை உறுப்பினா்கள் கிரிராஜன், எம்.எம்.அப்துல்லா ஆகியோா் செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது திருச்சி சிவா கூறியது:       நாடாளுமன்றத்தில் நாங்கள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலைவாசி உயா்வு குறித்து விவாதிக்குமாறு கூறுகிறோம். தேவையற்ற விஷயங்களைக் கோரவில்லை. ஆனால், மத்திய அரசு அதற்கு செவிசாய்ப்பதில்லை. விவாதத்திற்கே மத்திய அரசு தயாராக இல்லை. நாடாளுமன்றம் என்பது சட்டங்களை இயற்றுவதற்கான இடம் மட்டும் அல்ல. மக்களுக்கான பிரச்னைகளை பேசி நிறைவேற்றக்கூடிய இடமாகும். நாங்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறோம் என பொய்ப் பிரசாரத்தை அரசு நடத்துகிறது. மக்கள் பிரச்னையை தீா்க்கப் போராடும் எங்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட எந்த நடவடிக்கை எடுத்தாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். மக்கள் பிரச்னையை தீா்க்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.