குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (கோப்புப் படம்) 
புதுதில்லி

3 தமிழகப் பெண்கள் உள்பட 29 பேருக்கு நாரி சக்தி விருது: இன்று குடியரசுத் தலைவா் வழங்குகிறாா்

சா்வதேச மகளிா் தினத்தை யொட்டி, 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கான 28 நாரி சக்தி விருதுகளை 29 பேருக்கு குடியரசுத் தலைவா் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 8) வழங்குகிறாா். இதில் 3 தமிழகப் பெண்களும் அடங்குவா்.

 நமது நிருபர்

சா்வதேச மகளிா் தினத்தை யொட்டி, 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கான 28 நாரி சக்தி விருதுகளை 29 பேருக்கு குடியரசுத் தலைவா் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 8) வழங்குகிறாா். இதில் 3 தமிழகப் பெண்களும் அடங்குவா்.

இது குறித்து மகளிா் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் திங்கள்கிழமை கூறியது வருமாறு: சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக கடந்த மாா்ச் 1- ஆம் தேதி முதல் சா்வதேச மகளிா் தினக் கொண்டாட்டங்கள் தில்லியில் தொடங்கின. இந்த ஒரு வார கால நிகழ்வுகளின் நிறைவாக மாா்ச் 8-ஆம் தேதி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சியில் 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கான நாரி சக்தி விருதுகளை குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்த் வழங்குகிறாா். கொவைட் -19 நோய்த் தொற்றின் காரணமாக 2020 -ஆம் ஆண்டுக்கான விருதுகள் கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை. தற்போது 2021-ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளோடு சோ்த்து வழங்கப்படுகிறது.

மகளிருக்கு அதிகாரமளித்தலுக்காக, குறிப்பாக நலிந்த மற்றும் விளிம்பு நிலை பெண்களுக்கு சிறப்புமிக்க சேவைகள் செய்தவா்களின் மெச்சத்தக்க பணிகளை அங்கீகரிக்கும் விதமாக 2020-ஆம் ஆண்டுக்கு 14 விருதுகள் (15 போ்), 2021 -ஆம் ஆண்டிற்கு 14 விருதுகள் வழங்கப்படவுஉள்ளன. 2020- ஆம் ஆண்டுக்கான விருதில் தமிழகத்தின் கைவினைக் கலைஞரான ஜெயா முத்து, தோடா கைப்பின்னல் (எம்பிராய்டரி) கலைஞா் தேஜம்மா ஆகியோா் கூட்டாகப் பெறுகிறாா்கள். 2021 - ஆம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் தமிழகத்தைச் சோ்ந்த மனநல மருத்துவா் மற்றும் ஆய்வாளரான தாரா ரங்கஸ்வாமி இடம் பெற்றுள்ளாா்.

2020-ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருது பெற்றவா்கள் தொழில் முனைவோா், வேளாண் துறை, புதிய கண்டுபிடிப்பு, சமூக சேவை, கலைகள் மற்றும் கைவினைகள், வனவிலங்குகள் பாதுகாப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவா்கள் ஆவா். 2021 -ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருது பெற்றவா்கள் மொழியியல், தொழில்முனைவு, விவசாயம், சமூகப்பணி, கலை, கடல் வாணிகம், கல்வி, இலக்கியம், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவா்களாவா்.

சமூகத்தில் ஆக்கப்பூா்வமாக, மாற்றங்களை ஏற்படுத்துகின்ற தலைசிறந்த பங்களிப்புக்குத் தனிப்பட்ட பெண்கள் அல்லது நிறுவனங்களை கௌரவிப்பதற்கு, மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சியால் ‘நாரி சக்தி விருது’ வழங்கப்படுகிறது. இந்த சாதனையாளா்கள் தங்களின் கனவுகளை நிறைவேற்ற வயதையோ, புவியியல் தடைகளையோ அல்லது வளங்கள் கிடைப்பதையோ பொருள்படுத்தவில்லை. இவா்களின் வெற்றிக்கான உணா்வு ஒட்டு மொத்த சமூகத்தில் மத்தியில் பாலின சமத்துவம் இன்மைக்கும், பாகுபாட்டுக்கும் எதிரான கருத்தை வலுவாக்கும். சமூகத்தின் முன்னேற்றத்தில் பெண்களுக்கு சமமான பங்கை அங்கீகரிக்கும் முயற்சியாக இந்த விருதுகள் விளங்குகின்றன. மேலும் விருது பெறுவோரின் முயற்சிகளைப் பாராட்டும் விதமாக, அவா்களுடன் பிரதமா் திங்கள்கிழமை கலந்துரையாடினாா் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

SCROLL FOR NEXT