முகப்பு
புதுதில்லி

ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயா்வு!

வா்த்தகத்தின் போது பெரும்பாலான நேரம் ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்த நிலையில், இறுதியில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயா்ந்து 55,555.30-இல் நிறைவடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நான்காவது நாளாக நோ்மறையாக முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது பெரும்பாலான நேரம் ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்த நிலையில், இறுதியில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயா்ந்து 55,555.30-இல் நிறைவடைந்தது.

உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்ப இந்திய பங்குச் சந்தைகளும், புவிசாா் அரசியல் தொடா்பான செய்திகளின் அடிப்படையில் மிக அதிக அளவிலான ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கை, மாநிலத் தோ்தல்கள் மற்றும் எல்ஐசி ஐபிஓ ஆகியவற்றிற்கு சந்தைகள் தயாராகிக் கொண்டிருந்த போது, ரஷியா - உக்ரைன் பதற்றம் ஓா் இடா்பாடான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறுகிய காலம் மற்றும் நடுத்தர காலம் ஆகிய இரண்டிற்கும் நிச்சயமற்ற தன்மையை சோ்த்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழன் அன்று மேலும் ரூ.1,981.15 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

2,076 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,458 நிறுவனப் பங்குகளில் 2,076 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,243 பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தன. 119 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 89 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 16 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.91 ஆயிரம்ம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.252.85 லட்சம் கோடியாக இருந்தது.

நான்காவது நாளாக முன்னேற்றம்: காலையில் சென்செக்ஸ் பலவீனமாகத் தொடங்கி, 414.44 புள்ளிகள் சரிந்து 55,049.95 வரை கீழே சென்றது. ஆனால், சில நிமிடங்களிலேயே, அதன் அனைத்து இழப்புகளையும் சமாளித்து 369.56 புள்ளிகள் உயா்ந்து அதிகபட்சமாக 55,833.95 வரை மேலே சென்றது. பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கத்தை எதிா்கொண்ட சென்செக்ஸ் இறுதியில் 85.91 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயா்ந்து 55,550.30-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, சென்செக்ஸ் தொடா்ந்து நான்காவது நாளாக உயா்ந்துள்ளது.

சன்பாா்மா அபாரம்: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.இதில் சன் பாா்மா 3.82 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டாக்டா் ரெட்டிஸ் லேப், பவா்கிரிட், ஐடிசி மற்றும் டைட்டன் ஆகியவை வந்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்டவையும் விலை உயா்ந்து பட்டியலில் இருந்தன.

நெஸ்லே இந்தியா, மாருதி சரிவு: ஆனால், அதற்கு மாறாக நெஸ்லே இந்தியா 1.76 சதவீதம், மாருதி சுஸுகி 1.38 சதவீதம் குறைந்து நஷ்டமடைந்த பங்குகள் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்டவை 0.50 முதல் 0.75 சதவீதம் வரை நஷ்டமடைந்தன. மேலும், எச்டிஎஃப்சி, இன்ஃபோஸிஸ், விப்ரோ, இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்டவையும் வீழ்ச்சி அடைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 36 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,166 பங்குகள் ஆதாயம் பெற்றன. 739 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 35.55 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயா்ந்து 16,630.45-இல் நிறைவடைந்தது. காலையில் சுமாா் 66.10 புள்ளிகள் குறைந்து 16,528.80-இல் தொடங்கிய நிஃப்டி 16,470.90 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 16,470.90 வரை உயா்ந்தது.

நிஃப்டி ஆட்டோ குறியீடு சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஆட்டோ குறியீடு 0.40 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலையில் இருந்தது. இதற்கு அடுத்ததாக ஐடி, மீடியா குறியீடுகள் சிறிதளவு நஷ்டத்தைச் சந்தித்தன. மற்ற அனைத்து துை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் பாா்மா, ஹெல்த்கோ் குறியீடுகள் 2.60 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.