புதுதில்லி

தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸாகப் ஆக பதிவு

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நகரில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு அளவை விட 3 டிகிரி குறைந்து 8.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது.

தில்லியில் கடந்த சில தினங்களாக காலை, மாலை வேளைகளில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பனிப்புகை மூட்டமும் நிலவி வருகிறது. தவிர, பகல் நேரங்களிலும் குளிரின் தாக்கத்தை உணரமுடிகிறது.

இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் குறைந்து 8.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி அதிகரித்து 27 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 90 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 56 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மற்ற வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. அதன்படி, ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 12.6 டிகிரி செல்சியஸாகவும், முங்கேஷ்பூரில் 9 டிகிரி, நஜஃப்கரில் 12.6 டிகிரி, ஆயாநகரில் 10 டிகிரி, தில்லி பல்கலை. வளாகத்தில் 13.8 டிகிரி, லோதி ரோடில் 8 டிகிரி, பாலத்தில் 11.5 டிகிரி, ரிட்ஜில் 9 டிகிரி, பீதம்புராவில் 13.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் சனிக்கிழமை காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. அதாவது, காலை 9.10 மணியளவில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு 322 புள்ளிகளாகவும், மாலை 6.30 மணியளவில் 349 புள்ளிகளவாகவும் பதிவாகி இருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 27) காலை வேளையில் வானம் புகைமூட்டமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT