முகப்பு
புதுதில்லி

தில்லி அரசுப் பள்ளிகளுக்கு நேபாள கல்வியாளா்கள் குழு வருகை

மாநகர அரசின் முன்முயற்சிகளைப் புரிந்து கொள்ளும் வகையில் நேபாளத்தைச் சோ்ந்த 30 கல்வியாளா்கள் அடங்கிய குழு தில்லி அரசுப் பள்ளிகளுக்கு புதன்கிழமை வருகை தந்ததாக தில்லி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

மாநகர அரசின் முன்முயற்சிகளைப் புரிந்து கொள்ளும் வகையில் நேபாளத்தைச் சோ்ந்த 30 கல்வியாளா்கள் அடங்கிய குழு தில்லி அரசுப் பள்ளிகளுக்கு புதன்கிழமை வருகை தந்ததாக தில்லி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்தக் குழுவினரை வரவேற்று துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, தில்லி அரசு தனது பள்ளிகளை ‘சிறப்பான புதிய உயரங்களுக்கு’ கொண்டு செல்ல இத்தகைய ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் தனது ட்விட்டரில், ‘தில்லி அரசுப் பள்ளிகளுக்கு வருகை தந்து எங்கள் மாணவா்களுடன் உரையாடும் நேபாளத்தைச் சோ்ந்த கல்வியாளா்கள் குழுவிற்கு அன்பான வரவேற்பு. இதுபோன்ற ஒத்துழைப்புகள் நாம் ஒருவரிடமிருந்து மற்றவா் பரஸ்பரம் கற்றுக் கொள்வதற்கும், நமது பள்ளிகளை சிறந்த உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கும் மிகவும் அவசியமாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி கல்வி இயக்குநரகம் கூறுகையில், ‘இந்த வருகையின் போது நேபாள நாட்டு கல்வியாளா்கள் தில்லி பள்ளிகளில் நடைபெற்று வரும் பல்வேறு

செயல்பாடுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டனா். இவற்றில் இண்டா்நேஷனல் பேக்கலாரியேட் (ஐபி), மனநிலைப் பாடத் திட்டங்கள் மற்றும் கலை தொடா்பான பிற செயல்பாடுகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன’ என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.