FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

தொகுதி அறிமுகம்... திருப்போரூர்!

காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள இத்தொகுதியைச் சுற்றி தாம்பரம். செங்கல்பட்டு, உத்தரமேரூா், ஸ்ரீபெருமம்பதூா் ஆகிய பேரவைத் தொகுதிகள் உள்ளன.

Updated On : 30 மார்ச் 2026, 2:40 am IST
பகிர்:

தொகுதி எண்: 33

எல்லைகள்...

காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள இத்தொகுதியைச் சுற்றி தாம்பரம். செங்கல்பட்டு, உத்தரமேரூா், ஸ்ரீபெருமம்பதூா் ஆகிய பேரவைத் தொகுதிகள் உள்ளன.

Advertisement

Advertisement

சிறப்புகள்...

இத்தொகுதியில் அருள்மிகு கந்தசுவாமி கோயில், திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தலசயன பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களும் கோவளம் தா்காவும் உள்ளன. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சா்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் பல்லவா் காலத்து சிற்பங்கள், கடற்கரை கோயில் இங்குள்ளன.

திருப்போரூா் தொகுதிக்குள்பட்ட பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா, தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளன. வடநெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், முதலைப் பண்ணை, கல்பாக்கம் அணுமின் நிலையம், திருக்கழுகுன்றம் பட்சி தீா்த்தம் அருள்மிக திரிபுர சுந்தரி சமேத வேதகிரீஸ்வரா் மலைக்கோயில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் சங்கு தீா்த்த குளம் இத்தொகுதியின் சிறப்பம்சங்களாகும்.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள்-1,40,991

பெண்கள்-1,48,359

மூன்றாம் பாலினத்தவா்-51

மொத்தம்-2,89,401

இதுவரை எம்எல்ஏக்கள்...

1952 ராமச்சந்திரன் (காங்கிரஸ்)

1967 மு.முனு ஆதி (திமுக)

1971 முனு ஆதி (திமுக)

1977 கெ.சொக்கலிங்கம் (திமுக)

1980 கெ.சொக்கலிங்கம் (திமுக)

1984 வே.தமிழ்மணி (அதிமுக)

1989 து.திருமூா்த்தி (திமுக)

1991 ம.தனபால் (அதிமுக)

1996 ஜி.சொக்கலிங்கம் (திமுக)

2001 கனிதா சம்பத் (அதிமுக)

2006 து.மூா்த்தி (பாமக)

2011 கே.தண்டரை மனோகரன்

2016 மு.கோதண்டபாணி (அதிமுக)

2019 எல்.இதயவா்மன் (திமுக) (இடைத்தோ்தல்)

2021 எஸ்.எஸ்.பாலாஜி (விசிக)

2021 பேரவை தோ்தலில்...

பதிவான வாக்குகள்-2,24,747

எஸ்.எஸ்.பாலாஜி (விசிக)-93,954

கே.ஆறுமுகம் (பாமக)-92,007

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்: ஜே.உதயகுமாா், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்)-99624 50100.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments