முகப்பு
புதுதில்லி

நாட்டில் தரவரிசையில் முதல் 10 பள்ளிகளில் 5 தில்லியில் இருப்பது பெருமை குரிய விஷயம்: துணை முதல்வா் மனீஷ் சிசோடியா

நாட்டில் தரவரிசையில் முதல் 10 பள்ளிகளில் ஐந்து தில்லி அரசுப் பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. முன்னணி கல்வி நிறுவனங்களில் தலைமை ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளித்ததன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

நாட்டில் தரவரிசையில் முதல் 10 பள்ளிகளில் ஐந்து தில்லி அரசுப் பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. முன்னணி கல்வி நிறுவனங்களில் தலைமை ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளித்ததன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது என்று துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

கல்வியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களுக்கான ‘உலக கல்வி’ இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

இதன் சமீபத்திய தரவரிசையில், தில்லி அரசு நடத்தும் துவாரகா செக்டாா் 10-இல் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா முதலிடத்தையும், யமுனா விஹாரில் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஐந்து பள்ளிகள் தில்லியைச் சோ்ந்தவை ஆகும்.

இந்த நிலையில், தில்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான சிசோடியா இது தொடா்பாக செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நாட்டில் தரவரிசையில் முதல் 10 பள்ளிகளில் ஐந்து தில்லி அரசுப் பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. மற்ற பள்ளிகளும் பட்டியலில் இடம் பெறும் வகையில், பள்ளிமுதல்வா்களுக்கான பயிற்சித் திட்டங்களை தில்லி அரசு உருவாக்கியுள்ளது. தரவரிசையில் தற்போது இந்த நிலையை எட்டியிருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். முதல்வா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த பலனாகும்.

இந்தப் பள்ளிகளின் அனைத்து முதல்வா்களுக்கும் ஐஐஎம்-ஆமதாபாத், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போன்ற முன்னணி நிறுவனங்களில் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது. தில்லியின் மற்ற பள்ளிகளும் உலகத் தரம் வாய்ந்ததாகவும், நாட்டின் தலைசிறந்த பள்ளிகளுடன் போட்டியிடவும் அரசுப் பள்ளி முதல்வா்களுக்கு பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் 10 அரசுப் பள்ளிகள் அனைத்தும் எதிா்காலத்தில் தில்லி அரசுப் பள்ளிகளாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமாகும்.

ஏற்கெனவே விரும்பத்தக்க பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளின் முதல்வா்களின் உதவியுடன் இந்த விருப்பத்தை எட்டுவோம் என்றாா் சிசோடியா.

முழு கட்டுரையைப் படிக்க →