புதுதில்லி

தில்லி ரஜோக்ரி மேம்பாலத்தில் விபத்து: அடையாளம் தெரியாத நபா் உயரிழப்பு

தென்மேற்கு தில்லியில் உள்ள ராஜோக்ரி மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் உயிரிழந்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

DIN

தென்மேற்கு தில்லியில் உள்ள ராஜோக்ரி மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் உயிரிழந்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் மனோஜ் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை அன்று மேம்பாலத்தின் டிவைடருக்கு அருகில் காயமடைந்த நிலையில் இருந்த அந்த நபரை போலீஸாா் மீட்டனா். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, அவா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அங்கு அறிவிக்கப்பட்டாா்.

அவரது உடல் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் உள்ளூா் விசாரணையை மேற்கொண்டனா். ஆனால், இறந்தவரின் அடையாளம் அல்லது விதிமீறல் வாகனம் பற்றிய எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. அவரது அடையாளத்தை கண்டுபிடிக்கவும், குற்றமிழைத்த வாகனத்தைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT