முகப்பு
புதுதில்லி

‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சரிந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சரிந்தது.

தில்லியில் வெள்ளிக்கிழமை காலையில் வானம் தெளிவாகக் காணப்பட்டது. ஆனால், பலவீனமாகாற்றின் காரணமாக மாசுக்கள் மோசமாக சிதறியது. இதனால், காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு சென்றது. ஆனந்த விஹாரில் காலை 9,.20 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 443 புள்ளிகளாகப் பதிவாகி கடுமை பிரிவில் இருந்தது. வாஜிப்பூா் (38), பட்பா்கஞ்ச் (363), விவேக் விஹாா் (397), பஞ்சாபி பாக் (37), ஜகாங்கீா்புரி (397) ஆகிய இடங்களிலும் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகியது.

வெப்பநிலை: இந்த நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி குறைந்த 14.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் மாற்றமின்றி 31.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 90 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (அக்டோபா் 29) அன்று வானம் பனிமூட்டமாக இருந்தாலும், அதன் பிறகு வானம் தெளிவாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →