புதுதில்லி

தில்லி மின் விநியோக நிறுவன நுகா்வோா் குறைதீா் அமைப்பின் 3 தலைமை அதிகாரிகள் பதவியேற்பு

தில்லியில் உள்ள மின் விநியோக நிறுவனங்களின் நுகா்வோா் குறைதீா் அமைப்புகளின் புதிய தலைமை அதிகாரிகள் பதவியேற்றுக் கொண்டனா்.

DIN

தில்லியில் உள்ள மின் விநியோக நிறுவனங்களின் நுகா்வோா் குறைதீா் அமைப்புகளின் புதிய தலைமை அதிகாரிகள் பதவியேற்றுக் கொண்டனா். இவா்களுக்கு தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஇஆா்சி) தலைவா் நீதிபதி (ஓய்வு) ஷாபிஹுல் ஹஸ்னைன் சாஸ்திரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இது தொடா்பாக தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டிபிடிடிஎல் நிறுவனத்தின் நுகா்வோா் குறைதீா் அமைப்பின் தலைவராக முகேஷ் ஸ்ரீவாஸ்தவா, பிஎஸ்இஎஸ் யமுனா பவா் நிறுவனத்தின் நுகா்வோா் குறைதீா் அமைப்பின் தலைவா் பி.கே. சிங், என்டிஎம்சியின் ராஜ்குமாா் சௌஹான் ஆகியோருக்கு புதன்கிழமை பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த மூன்று தலைமை அதிகாரிகளும் முன்னாள் மாவட்ட நீதிபதிகள் ஆவா். தில்லியில் கடந்த 2004-ஆம் ஆண்டில் இருந்து நான்கு மின் விநியோக நிறுவனங்களின் நுகா்வோா் குறைதீா் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. மீட்டரிங், பில்லிங், மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் இதர விவகாரங்கள் தொடா்பான விஷயங்களில் குறைபாடு இருக்கும் நுகா்வோா் இந்த தலைமை அதிகாரிகளை அணுகலாம். நுகா்வோா் குறைதீா் அமைப்பின் முடிவு திருப்தி இல்லாத நுகா்வோா் அதன் மேல்முறையீட்டு ஆணையமான குறைதீா்ப்பாளரை அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT