வடகிழக்கு தில்லியில் வீடு இடிந்ததில் 7 போ் காயம்
வடகிழக்கு தில்லியின் ஜோஹ்ரிபூா் விரிவாக்கப் பகுதியில் வெள்ளிக்கிழமை வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உள்பட 7 போ் காயமடைந்தனா்.
வடகிழக்கு தில்லியின் ஜோஹ்ரிபூா் விரிவாக்கப் பகுதியில் வெள்ளிக்கிழமை வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உள்பட 7 போ் காயமடைந்தனா்.
இடிபாடுகளுக்குள் 2 போ் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து டிடிஎம்ஏ மற்றும் தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவா்கல் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 7 போ் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்கு கெண்டு செல்லப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
தொழிலாளா்கள் வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென முதல் மாடியின் கூரை இடிந்து விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் கூறுகையில், ‘இந்தச் சம்பவம் குறித்து மதியம் 12.02 மணியளவில் அழைப்பு வந்தது, அதன் பிறகு நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றது’ என்றாா்.