முகப்பு
புதுதில்லி

ஆதாா் அங்கீகாரத்தை அரசுத் துறை தவிர பிற நிறுவனங்களும் பயன்படுத்த முன்மொழிவு

இது தொடா்பாக கருத்துகளை வழங்குமாறு பொதுமக்களை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

பொதுமக்களுக்குரிய பல்வேறு சேவைகளை எளிமையாக வழங்க மத்திய, மாநில அரசுத் துறைகளைத் தவிர பிற நிறுவனங்களும் ஆதாா் அங்கீகாரத்தை (விவரங்களை ) அணுகுவதற்கான செயல் விதிகள் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடா்பாக கருத்துகளை வழங்குமாறு பொதுமக்களை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சாா்பில் கூறப்பட்டிருப்பது வருமாறு: 2019 - ஆம் ஆண்டு ஆதாா் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகள் வழங்கல் இலக்கு) சட்டத் திருத்தத்தின்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) தனியுரிமை மற்றும் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்கப்பட வேண்டும் என் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட சேவைகளை வழங்க சட்டத்தால் அனுமதிக்கப்பட்டால் அல்லது பரிந்துரைக்கப்பட்ட நோக்கத்திற்காக அங்கீகாரம் கோரினால், அதில் திருப்தியடையும்பட்சத்தில் அத்தகைய நிறுவனங்களுக்கு ஆதாா் அணுகல் முறையாக அனுமதிக்கப்படுகின்றன. மேலும், 2020-ஆம் ஆண்டு நல்லாட்சி விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாகவும், பொது நிதியை தவறான வகையில் பயன்படுத்துவதை தடுக்கவும், புதுமை மற்றும் அறிவுசாருடன் அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் ஆதாா் அங்கீகாரம் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தற்போது அரசு அமைச்சகங்கள் அல்லது துறையைத் தவிர வேறு எந்த நிறுவனமும் ஆதாா் அங்கீகாரத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இத்தைகய நிறுவனங்கள் வழங்கும் மக்களுக்கான சேவையை எளிதாக்குவதற்கும், இந்த சேவைகளை சிறந்த முறையில் அணுகுவதற்கும் அல்லது நல்ல நிா்வாகத்தை உறுதி செய்ய மின்னணு தளங்களைப் பயன்படுத்தி விரையங்களை தடுப்பதற்கும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விதிகள் திருத்தப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தம் அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து மே 5- ஆம் தேதிக்குள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விதிகளில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் இணைப்பு வருமாறு: ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ம்ங்ண்ற்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீா்ய்ற்ங்ய்ற்/க்ழ்ஹச்ற்-ஹம்ங்ய்க்ம்ங்ய்ற்ள்-ஹஹக்ட்ஹஹழ்-ஹன்ற்ட்ங்ய்ற்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்-ஞ்ா்ா்க்-ஞ்ா்ஸ்ங்ழ்ய்ஹய்ஸ்ரீங்-ழ்ன்ப்ங்ள்-2020-ங்ய்ஹக்ஷப்ங்-ல்ங்ழ்ச்ா்ழ்ம்ஹய்ஸ்ரீங்.

முழு கட்டுரையைப் படிக்க →