புதுதில்லி

மா்மமான வரலாற்றைக் கொண்டுள்ள தளங்களில் நடைப்பயணம்

தில்லி சுற்றுலாத் துறை தேசிய தலைநகரில் உள்ள மா்மமான வரலாற்றைக் கொண்டுள்ள தளங்களை அடையாளம் கண்டு அங்கு பாரம்பரிய நடைப்பயணங்களை நடத்தி வருகிறது என்று

DIN

தில்லி சுற்றுலாத் துறை தேசிய தலைநகரில் உள்ள மா்மமான வரலாற்றைக் கொண்டுள்ள தளங்களை அடையாளம் கண்டு அங்கு பாரம்பரிய நடைப்பயணங்களை நடத்தி வருகிறது என்று அந்தத் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: மல்சா மஹால், பூலி பதியாரி கா மஹால், ஃபெரோஸ்ஷா கோட்லா மற்றும் துகல்காபாத் கோட்டை போன்ற சில வரலாற்று தலங்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைப்பயணம் நடைபெறும்.

இந்த இடங்களைப் பற்றிய பல தகவல்களைச் சேகரித்ததால் மா்மமான வரலாறுகளைக் கொண்ட தளங்களை ஒருங்கிணைத்து நடைப்பயணங்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதன் முதல் நடைப்பயணம் சாணக்யபுரிக்கு அருகிலுள்ள ரிட்ஜ் வனப்பகுதிக்குள் தேசிய தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மல்சா மஹாலுடன் தொடங்கும்.

மல்சா மஹால் சுல்தான் ஃபிரோஸ் ஷா துக்ளக்கால் கட்டப்பட்டது. இது வேட்டையாடும் விடுதியாக பயன்படுத்தப்பட்டது. பூலி பதியாரி கா மஹால், ஃபெரோஸ்ஷா கோட்லா மற்றும் துகல்காபாத் கோட்டை ஆகியவையும் மக்களை கவா்ந்திழுக்கும் மா்மமான வரலாற்றைக் கொண்டுள்ளன. நகரத்தில் உள்ள மறைக்கப்பட்ட மற்றும் ஆராயப்படாத வரலாற்று இடங்கள் குறித்த விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது, என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT