முகப்பு
புதுதில்லி

தலைநகரில் பகலில் மிதமான வெயில்; மாலையில் மேகமூட்ட சூழல்- இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. மாலையில் மேகமூட்ட சூழல் காணப்பட்டது. சில இடங்களில் மழை பெய்ததாக வானிலை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:17 PM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. மாலையில் மேகமூட்ட சூழல் காணப்பட்டது. சில இடங்களில் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், அடுத்த 6 முதல் 7 தினங்களுக்கு மேகமூட்ட வானிலையும், அவ்வப்போது மழையும் இருக்கும் என்று கணித்துள்ளது. புதன்கிழமை (ஜூன் 5) மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும், இதன்காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியில் கடந்த வாரத்தில் தொடா்ந்து சில தினங்கள் மழை பெய்தது. இதனால், நகரில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து, புழுக்கத்தில் இருந்து தில்லிவாசிகள் சற்று நிம்மதி அடைந்தனா். ஆனால், கடந்த இரு தினங்களாக மழை ஏதும் பெய்யவில்லை. இதனால், மாலையில் புழுக்கத்தின் தாக்கம் இருந்தது. செவ்வாய்க்கிழமை நகரில் காலை முதல் மதியம் வரை மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. மாலை 3 மணிக்குப் பிறகு மேகமூட்ட சூழலும், குளிா்ந்த காற்றும் வீசியது. சில இடங்களில் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 2 டிகிரி அதிகரித்து 29.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றம் ஏதுமின்றி 37.7 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி மற்றும் மாலை 5.30 மணியளவில் 75 சதவீதமாக பதிவாகி இருந்தது.

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 37.8 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 35.8 டிகிரி, நஜாஃப்கரில் 38.6 டிகிரி, ஆயாநகரில் 35.7 டிகிரி, தில்லி பல்கலைக்கழகத்தில் 37.6 டிகிரி, லோதி ரோடில் 36 டிகிரி, பாலத்தில் 37.8 டிகிரி, ரிட்ஜில் 35.9 டிகிரி, பீதம்புராவில் 37.3 டிகிரி, பூசாவில் 37.2 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 34.3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, நேரு நகா், ராமகிருஷ்ணா புரம், மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘புதன்கிழமை (ஜூலை 5) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.