புதுதில்லி

மேற்கு தில்லி மருத்துவமனையில் தீ புதிதாகப் பிறந்த 20 குழந்தைகள் மீட்பு

மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் புதிததாக பிறந்த 20 குழந்தைகள் மற்ற மருத்துவ வசதிகளுக்கு மாற்றப்பட

DIN

மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் புதிததாக பிறந்த 20 குழந்தைகள் மற்ற மருத்துவ வசதிகளுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறைக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 1.35 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

மருத்துவமனையின் அடித்தளத்தில் இருந்த சில தளவாடங்கள் தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு அதிகாலை 2.25 மணியளவில் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனா். மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த 20 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டன. உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT