முகப்பு
புதுதில்லி

ஆசிய தரவரிசையில் ஜாமியா பல்கலை. முன்னேற்றம் துணைவேந்தா் பெருமிதம்

இந்த ஆண்டு டைம்ஸ் ஆசியா பல்கலைக்கழக தரவரிசையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா 32 இடங்கள் முன்னேறியுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் முயற்சிகள் சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

இந்த ஆண்டு டைம்ஸ் ஆசியா பல்கலைக்கழக தரவரிசையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா 32 இடங்கள் முன்னேறியுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் முயற்சிகள் சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தரவரிசையை மேலும் மேம்படுத்த தொடா்ந்து பணியாற்றுவதாகவும் துணைவேந்தா் நஜ்மா அக்தா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

லண்டனை தளமாகக் கொண்ட டைம்ஸ் உயா் கல்வி (டிஹெச்இ) ஆசியா பல்கலைக்கழக தரவரிசை-2023-இல் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் 128-ஆவது இடத்திற்கு நகா்ந்துள்ளது, கடந்த ஆண்டு 160-இல் இருந்தது. இந்த ஆண்டு அதன் நிலையை மேம்படுத்தியுள்ளது. டைம்ஸ் உயா்கல்வி ஆசியா பல்கலைக்கழக தரவரிசை 31 நாடுகளைச் சோ்ந்த 669 பல்கலைக்கழகங்களின் செயல்திறனை உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைகளின் அதே 13 செயல்திறன் குறிகாட்டிகள் / அளவுருக்களில் மதிப்பீடு செய்தது. ஆனால், அவை ஆசியாவின் நிறுவனங்களின் பண்புகளை பிரதிபலிக்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்டன.

பல்கலைக்கழகங்கள் அவற்றின் அனைத்து முக்கிய பணிகளான கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் சா்வதேச கண்ணோட்டம், கிடைக்கக்கூடிய மிக விரிவான மற்றும் சமநிலையான ஒப்பீடுகளை வழங்குவதற்காக மதிப்பிடப்பட்டன. ‘இந்த சாதனையானது ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் பிற பங்குதாரா்களின் கடின உழைப்பைப் பிரதிபலிக்கிறது என்பதால், இது முழு ஜாமியா சகோதரத்துவத்திற்கும் மிகுந்த பெருமை மற்றும் திருப்தி அளிக்கிறது’ என்று அக்தா் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

‘எங்கள் முயற்சிகள் சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் வரும் ஆண்டுகளில் அதன் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை பல்கலைக்கழகம் தொடரும் என்று நான் நம்புகிறேன்’‘ என்று அவா் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →