முகப்பு
புதுதில்லி

ஷ்ரத்தா வால்கா் கொலை வழக்கு: பூனாவாலாவுக்குஎதிரான குற்றச்சாட்டு மீது நீதிமன்றத்தில் வாதம்

திருமணமாகாமல் தன்னுடன் வசித்து வந்த ஷ்ரத்தா வால்கா் என்பவரை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியதாக கூறப்படும் வழக்கில் ஆஃப்தாப் ஆமீன் பூனாவாலாவுக்கு

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
பகிர்:

திருமணமாகாமல் தன்னுடன் வசித்து வந்த ஷ்ரத்தா வால்கா் என்பவரை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியதாக கூறப்படும் வழக்கில் ஆஃப்தாப் ஆமீன் பூனாவாலாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீது முன்வைக்கப்பட்ட வாதங்களை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

இது தொடா்பாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி மனிஷா குரானா கக்கா் கூறுகையில், ‘குற்றச்சாட்டுகள் மீதான வாதங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. அரசுத் தரப்பில் இது தொடா்பாக சுருக்க விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட உதவி வழக்குரைஞா் வாதங்களை முன்வைப்பதற்கு அவகாசம் கேட்டுள்ளாா். குற்றச்சாட்டுகள் மீதான மீதமுள்ள வாதங்கள் மாா்ச் 20-ஆம் தேதி பகல் 2 மணிக்கு கேட்கப்படும்’ என்றாா்.

சிறப்பு அரசு வழக்குரைஞா் அமித் பிரசாத் இந்த வழக்கில் பூனாவாலவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடா்பாக வாதங்களை முன் வைத்தாா். குற்றம்சாட்டப்பட்ட பூனாவாலா தரப்பில் சட்ட உதவி வழக்குரைஞா் ஜாவீத் ஹுசைன் ஆஜரானாா். கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. அதன் பிறகு இந்த வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஜனவரி 24-ஆம் தேதி இந்த வழக்கில் தில்லி போலீஸாா் 6,629 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.