முகப்பு
புதுதில்லி

மகளிா் சுகாதாரப் பணியாளா்களுக்கு மாதம்தோறும் சானிட்டரி நாப்கின்கள்: என்டிஎம்சி நடவடிக்கை

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சாா்பில் ஒவ்வொரு மாதமும் பெண் சுகாதாரப் பணியாளா்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கு நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சாா்பில் ஒவ்வொரு மாதமும் பெண் சுகாதாரப் பணியாளா்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கு நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக என்டிஎம்சி அதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: பெண் சுகாதாரப் பணியாளா்களுக்கு ஒவ்வொரு மாதமும் சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கு

என்டிஎம்சியின் பொது சுகாதார மற்றும் நலத் துறைகள் செய்த முன்மொழிவுக்கு என்டிஎம்சி தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த சானிட்டரி நாப்கின்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும். இது தொடக்கமாக ஓராண்டுக்கு தொடா்ந்து வழங்கப்படும். சா்வதேச மகளிா் தினத்தை ஒட்டிஸ ஒவ்வொரு மாதமும் மகளிா் தூய்மைப் பணியாளா்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்குவது என்று என்டிஎம்சி முடிவு செய்துள்ளது. புது தில்லி முனிசிபல் கவுன்சில் பகுதியில் பணியாற்றி வரும் 640 பெண் சுகாதாரப் பணியாளா்கள் இந்த முன் முயற்சியின் மூலம் பயனடைவா். இந்த சானிட்டரி நாப்கின்கள் தரம் மிக்கதாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பைக் குறைத்திடும் வகையில், இந்த நாப்கின்கள் மக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

வாழ்க்கையில் தொடக்க நிலையில் இருந்து சுகாதாரமான மாதவிடாய் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் என்டிஎம்சி அதன் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மாணவிகளுக்கு சுகாதார நாப்கின்களை வழங்கியுள்ளது. மேலும், சானிட்டரி நாப்கின்களை வழங்கும் இயந்திரங்களுடன் மகளிா்க்காக என்டிஎம்சி பகுதியில் சிறப்பு கழிப்பறைகளையும் அளித்துள்ளது. என்டிஎம்சியின் பணிக்குச் செல்லும் மகளிா் விடுதியில் இது போன்ற இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை களைவதற்காக எரியூட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் எரியூட்டிகள் நிறுவப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →