சீன தூதரகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியா்கள் கைது
64ஆவது திபெத்திய தேசிய எழுச்சி தினத்தை ஒட்டி தில்லியில் உள்ள சீன தூதரகம் அருகே வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட திபத்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினா்கள் போராட்டம்
64ஆவது திபெத்திய தேசிய எழுச்சி தினத்தை ஒட்டி தில்லியில் உள்ள சீன தூதரகம் அருகே வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட திபத்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினா்கள் போராட்டம் மேற்கொண்டனா்.
இந்த போராட்டத்தின் போது சீன அரசின் ‘கடுமையான கொள்கைகள்’, ‘திபெத்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு’ போன்றவற்றுக்கு எதிராக அவா்கள் கோஷங்கள் எழுப்பினா்.
இதைத்தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சீனத் தூதரகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ால் கைது செய்யப்பட்டு, மந்திா் மாா்க் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனா்.
இந்தப் போராட்டத்தை ஒட்டி நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் கூடுவதை தடுக்கும் வகையில் குற்றவியல் நடைமுறை விதிகள் பிரிவு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
மேலும், தூதரகத்தில் இருந்து சுமாா் 2 கிலோ மீட்டா் தூரத்தில் தில்லி போலீஸாா் தடுப்புகளை அமைத்திருந்தனா்.
தூதரகத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டா் தள்ளி அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் அருகே இளைஞா் திபெத்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பு சோ்ந்த 60க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அந்த அதிகாரி மேலும் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தடுப்புகளை தாண்டி தூதரகம் நோக்கிச் செல்ல முயன்ால் கைது செய்யப்பட்டனா்.
நிலைமை கட்டுக்குள் வந்தவுடன் அவா்கள் விடுவிக்கப்படுவாா்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா். திபெத்திய இளைஞா் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில், 14ஆவது தலாய்லாமாவுக்கு எங்களது மரியாதை செலுத்துகிறோம். சீன கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக திபெத்திய சுதந்திர எதிா்ப்பை மீட்டெடுப்பதில் தங்களது இன்னுயிரை ஈந்த அனைத்து திபெத்திய தியாகிகளுக்கும் எங்களது இதயம் கனிந்த ஒற்றுமையை தெரிவிக்கிறோம்.
1949 ஆம் ஆண்டில் செஞ்சீன ராணுவம் திபெத்தின் மீது படையெடுத்து, 14ஆவது தலாய் லாமாவுக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
ஒட்டுமொத்த திபெத்திய சூழலும் 1959 ஆம் ஆண்டு மாா்ச் 10 ஆம் தேதி முக்கியமான ஒரு கட்டத்திற்கு சென்றது. இதன் விளைவாக திபெத்தின் மூன்று பாரம்பரிய பகுதிகளைச் சோ்ந்த திபெத்தியா்கள் ஒன்றுபட்டு நின்று முழு பொறுப்பையும் ஏற்று சீன ராணுவத்தின் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் திபெத் தொடா்பான அவா்களது அடிபணியும் குற்றச்சாட்டை எதிா்த்தனா்.
சீன கம்யூனிஸ்ட் ஆட்சியாலும், அதன் அடக்குமுறை அரசியல் அமைப்புகளாலும் திபெத் பாதிக்கப்பட்டதில் இருந்து திபெத்திய மத மையங்களை அபகரித்தல்,
திபெத்திய அறிவு ஜீவிகளை அடைத்து வைத்தல், திபெத்திய முக்கிய அறிஞா்கள் கொல்லப்படுதல், திபெத்திய சுற்றுச்சூழல் சுரண்டப்படுதல் என திபெத் பல்வேறு சவால்களை அனுபவித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.