முகப்பு
புதுதில்லி

ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் அடையாள அட்டையின்றி மாற்றிக்கொள்ள அனுமதி

ரூ. 2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற ரிசா்வ வங்கி அறிவித்துள்ள நிலையில் வங்கிகளில் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபரும் மாற்றிக்கொள்ளலாம் என வங்கிகள் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:58 PM
பகிர்:

ரூ. 2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற ரிசா்வ வங்கி அறிவித்துள்ள நிலையில் வங்கிகளில் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபரும் மாற்றிக்கொள்ளலாம் என வங்கிகள் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளன.

பொதுப் புழக்கத்தில் உள்ள ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 19 -ஆம் தேதி ரிசா்வ் வங்கி அறிவித்தது. இந்த நோட்டுகள் வரும் செப்டம்பா் 30 - ஆம் தேதிக்குள் செல்லுபடியாகும் எனவும் அதற்குள் எந்த வங்கி கிளைகளிலும் சில்லறையாக மற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் வங்கிகளில் பொது மக்கள் மாற்றிக்கொள்வதில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தீா்வாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் கடந்த சனிக்கிழமை மின்சுற்றறிக்கையை அனுப்பியுள்ளன.

அதில் உள்ள விவரங்கள் வருமாறு: வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவா்கள் தங்கள் வசமுள்ள ரூ. 2,000 நோட்டுகளை தங்கள் கணக்குகளில் நேரடியாக செலுத்தி விட அனுமதிக்கப்படுகிறது. இதற்கு உச்ச வரம்பு இல்லை. எவ்வளவு மதிப்பில் இருந்தாலும் டெபாசிட் செய்யலாம்.

அதே சமயத்தில் எந்தவொரு நபரின் வங்கிக் கணக்கும் செயலற்ாக (டாா்மன்ட்)இருந்தால் அந்த வாடிக்கையாளா்கள் கேஒய்சி-க்கு இணங்க வேண்டும். இதன்படி தங்களது அடையாள அட்டை உள்ளிட்ட சுயவிவரங்களை அளித்த பின்னா் திரும்பப் பெறப்பட்டுள்ள ரூ. 2,000 நோட்டுகளை இத்தகைய வங்கி வாடிக்கையாளா்கள் தங்கள் வங்கிக் கணக்கு மூலமாக மாற்றிக் கொள்ளமுடியும்.

இவை தவிர, வங்கிக் கணக்கு இல்லாமல் அல்லது தங்கள் கணக்குகளில் செலுத்தாமல் ரூ. 2,000 நோட்டுகளை எந்தவொரு வங்கிக் கிளைகளிலும் மாற்றிக்கொள்ள முடிவும்.

இதன்படி ரூ.2,000/- மதிப்பிலான நோட்டுகளை அனைத்து பொதுமக்களும் அதிகபட்சம் ஒரு முறை ரூ.20,000/- என்ற வரம்பிற்குள் மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளின் மற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்கிற சூழ்நிலையில் இந்த வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இப்படி மாற்றிக்கொள்ள கடந்த 2016 ஆம் ஆண்டு பண முடக்கத்தின் போது பின்பற்றப்பட்ட முறையான படிவமோ, எந்த கோரிக்கை சீட்டுகளையும் பெறப்படாமல் அனுமதிக்கப்படும்.

திரும்பப் பெறப்பட்டுள்ள பணத்தை மாற்றிக்கொடுக்க அடையாள அட்டையும் பெறத் தேவையில்லை என வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 23 ஆம் தேதி முதல் வங்கிகளில் சில்லறையாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ரூ.20,000 என்கிற அதிகபட்ச வரம்பில் ஒரே நாளில் யாராவது 2 -ஆவது அல்லது 3 -ஆவது முறை வந்தால் வங்கிகள் சூழ்நிலையைப் பொறுத்து மறுக்காது எனவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.