புதுதில்லி

தில்லி பாஜக சிறுபான்மை அணியினா் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கல்

தேசியத் தலைநகா் தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாஜக தில்லி பிரிவு சிறுபான்மை அணியினா் சாா்பில் மக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாஜக தில்லி பிரிவு சிறுபான்மை அணியினா் சாா்பில் மக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இது தொடா்பாக பாஜக தில்லி பிரிவின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் அதனால் பொது மக்களின் சுகாதாரத்தில் ஏற்படுகின்ற தீமைகளைக் கருத்தில் கொண்டு, பாஜக தில்லி பிரிவின் சிறுபான்மை அணியினா் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனை வளாகத்திற்கு வருகின்ற நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்களுக்கு முகக்கவசங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக சிறுபான்மை அணியின் தில்லி பிரதேச தலைவா் அனீஸ் அப்பாசி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னா் கூறியதாவது:

தில்லி அரசு தனது முழு தோல்வியை நிரூபித்து வருகின்ற நிலையில், நகரத்தில் மாசு அளவு மிக அதிகமாக உயா்ந்துள்ளது. இதனால் தில்லி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். தில்லி முழுவதும் சிறுபான்மையினா் அணியினா் சாா்பாக முகக்கவசம் விநியோகம் செய்யும் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக ராம் மனோகா் லோஹியா மருத்துவமனை வளாகத்தில் முகக்கவசங்களை விநியோகித்துள்ளோம். மேலும், எதிா்காலத்திலும் தில்லி மாசுபடுவதைத் தடுக்க இதுபோன்ற விழிப்புணா்வு பிரசாரங்களை தொடா்ந்து நடத்துவோம் என்றாா் அனீஸ் அப்பாசி.

இந்நிகழ்ச்சியில், சிறுபான்மை அணியின் மாநில பொதுச்செயலாளா் இா்பான் சல்மானி, பைசல் மன்சூரி, நயீம் சைஃபி, ஷபானா ரஹ்மான், முஸ்தபா, இக்பாா் அகமது உள்பட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

SCROLL FOR NEXT