புதுதில்லி

அரசு அதிகாரி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்ற தில்லி நீதிமன்றம்

மைனா் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரமோதய் கக்கா மற்றும் அவரது மனைவி சீமா ராணி ஆகியோருக்கு

 நமது நிருபர்

மைனா் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரமோதய் கக்கா மற்றும் அவரது மனைவி சீமா ராணி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கருவுறச் செய்ததாக கக்கா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவரது மனைவி, சிறுமியின் கா்ப்பத்தை கலைக்க மருந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இருவா் மீதும் பதிவான குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிபதி (போக்சோ) ரிச்சா பரிஹாா் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டாா். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிராகத் வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் முதன்மையாக இருப்பதாகவும் நீதிபதி கூறினாா். தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல்களை வழங்குமாறு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கை டிசம்பா் 5-ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. நவம்பா் 2020 மற்றும் ஜனவரி 2021-க்கு இடையில் கக்கா, மைனா் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் தந்தை 2020, அக்டோபா் 1-ஆம் தேதி இறந்த பிறகு, குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டில் சிறுமி தங்கியிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT