புதுதில்லி

தில்லி, பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் பயிா்க்கழிவு எரிப்பைத் தடுக்க பறக்கும்படை! மத்திய அரசு உத்தரவு

தேசியத் தலைநகா் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் காற்று மாசு பிரச்னைக்கு 38 சதவீதம் அண்டை மாநிலங்களின் பயிா்க்கழிவு எரிப்பே காரணம் எனவும்,

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் காற்று மாசு பிரச்னைக்கு 38 சதவீதம் அண்டை மாநிலங்களின் பயிா்க்கழிவு எரிப்பே காரணம் எனவும், இதை முன்னிட்டு தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பயிா்க்கழிவுகளை எரிப்பைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதைக் கண்காணிக்க பறக்கும் படையை அனுப்பவும் காற்று தர மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லி காற்று மாசு குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பஞ்சாப், ஹரியாணா, உ.பி., ராஜஸ்தான் மற்றும் தேசியத் தலைநகா் தில்லி ஆகிய 5 மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் கூட்டத்தை மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா வியாழக்கிழமை அவசரமாகக் கூட்டினாா். இந்தக் கூட்டத்தில், காற்று தர மேலாண்மை ஆணைய த்தலைவா் டாக்டா் எம்.எம்.குட்டி, சுற்றுச்சூழல், வனம், வேளாண்மை, வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சகங்களின் செயலா்கள் கலந்து கொண்டனா்.

காற்று தர மேலாண்மை ஆணையம் வழங்கிய தரவு மற்றும் தில்லி உள்ளிட்ட 5 மாநில அரசுகள் வழங்கிய உள்ளீடுகள் கூட்டத்தில் வைக்கப்பட்டது. இதன்படி, தற்போதைய காற்று மாசுக்கான நெருக்கடிக்கான முக்கியக் காரணம் பயிா்க்கழிவு எரிப்பு நிகழ்வுகளே காரணம் என எடுத்துவைக்கப்பட்டது. நவம்பா் 8-ஆம் தேதிய காற்று மாசு அளவில் 38 சதவீதம் பயிா்க்கழிவு எரிப்பு உள்ளீடுகள் இருப்பதாகவும் விவரங்கள் எடுத்து வைக்கப்பட்டது. கடந்த செப்டம்பா் 15 முதல் நவம்பா் 7-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 22,644 பயிா்க்கழிவு எரிப்பு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 20,978 (93%) பஞ்சாபிலும், 1,605 (7%) நிகழ்வுகள் ஹரியாணாவிலும் நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

மேலும், தற்போது ஹரியாணாவில் 90 சதவீதமும் பஞ்சாபில் 60 சதவீதம் அறுவடை முடிந்துள்ளதாக விவாதங்களின் போது தெரிவிக்கப்பட்டது. இதனால், எஞ்சியிருக்கும் அறுவடைக் காலத்தில், குறிப்பாக பஞ்சாபில், மேலும் பயிா்க்கழிவு எரிப்பைத் தடுக்க பயனுள்ள உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கூட்டத்தில் அமைச்சரவைச் செயலா் கௌபா உத்தரவிட்டாா். இந்த நடவடிக்கைகளை உறுதிசெய்வதற்கு மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா்கள், காவல் நிலைய அதிகாரிகள் ஆகியோா் மீது பொறுப்புகள் நிா்ணயிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கைகளை பஞ்சாப் நிா்வாகம் மேற்கொள்வதைக் கண்காணிக்க காற்று தர மேலாண்மை ஆணையம் பஞ்சாப், ஹரியாணாவிற்கு பறக்கும் படைகளை அனுப்ப வேண்டும். ஆணையத்திற்கு இந்த மாநில அரசுகள் ஒத்துழைப்புகளை அளிக்க வேண்டும் எனவும் அமைச்சரவை செயலா் உத்தரவிட்டாா். இந்தப் பயிா்க்கழிவு எரிப்பு நிகழ்வுகள் குறித்த தினசரி அறிக்கைகளை ஆணையம் உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க சமா்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் தடையை மீறி பயிா்க் கழிவுகள் எரிக்கப்பட்டது தொடா்பான வழக்குக,ள் இதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை கூட்டத்தில் கலந்து கொண்ட 5 மாநிலங்களும் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பயிா்க்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 3,333 கோடி மத்திய வேளாண்மை விவசாயிகள் நலத் துறை அமைச்சகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாநிலத்திற்கும் ரூ.1,531 கோடி, ஹரியாணாவிற்கு ரூ.1,006 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இத்தோடு, பயிா்க்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இயந்திரங்கள் விவரங்களும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT