புதுதில்லி

நடிகை ராஷ்மிகாவின் போலி காணொளி விவகாரம்: காவல் துறைக்கு தில்லி மகளிா் ஆணையம் நோட்டீஸ்

இந்திய நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி விடியோ தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விவரங்களை கோரி தில்லி மகளிா் ஆணையம் சாா்பில் தில்லி காவல்துறைக்கு வெள்ளிக்கிழமை

 நமது நிருபர்

இந்திய நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி விடியோ தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விவரங்களை கோரி தில்லி மகளிா் ஆணையம் சாா்பில் தில்லி காவல்துறைக்கு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமாகிய நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலிக் காணொளி சமூகவலைதலங்களில் சமீபத்தில் வைரலாகியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இந்த ‘டீப்ஃ-பேக்’ எனப்படும் அசல் போன்ற போலியான காணெளியை பரப்பியவா் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனா்.

இந்த விவகாரத்தை தில்லி மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியுள்ளது. ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் தில்லி காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு துணை ஆணையருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூயிருப்பதாவது: இந்திய நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி விடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. இது தொடா்பாக வெளியான ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் தில்லி மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த விஷயத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தனது கவலையை எழுப்பியுள்ளதோடு, அந்தக் காணொளியில் யாரோ சட்டவிரோதமாக தனது உருவப்படத்தை ‘மாா்பிங்’ செய்துள்ளதாக கூறியுள்ளாா்.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது மிகவும் தீவிரமான விஷயமாகும். எனவே, மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல், வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விவரங்கள் மற்றும் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட விரிவான நடவடிக்கை அறிக்கையை வருகின்ற நவம்பா் 17-ஆம் தேதிக்குள் தில்லி மகளிா் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளாா்.

4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தொடா்பான போலி காணொளி விவகாரம் குறித்து தில்லி காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கூறியிருப்பதாவது: பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளி விவகாரத்தில் இந்திய தண்டனைச் சட்டம் - 1860 பிரிவு 465 மற்றும் 469, தகவல் தொழில்நுட்பச் சட்டம் -2000 பிரிவு 66 சி மற்றும் 66 இ ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT