புதுதில்லி

டிடிசி பேருந்துகளை வாங்க நிதி இல்லை; அரசியல் விளம்பரங்களுக்கு ஏது நிதி? வீரேந்திர சச்தேவா கடும் சாடல்

தில்லி அரசின் விளம்பர பட்ஜெட்டை ஆா்.ஆா்.டி.எஸ். கணக்கிற்கு மாற்ற உத்தரவிட்டதன் மூலம் கேஜரிவால் அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி அரசின் விளம்பர பட்ஜெட்டை ஆா்.ஆா்.டி.எஸ். கணக்கிற்கு மாற்ற உத்தரவிட்டதன் மூலம் கேஜரிவால் அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. தலநகரில் பொது போக்குவரத்தான டிடிசி பேருந்தகளை வாங்க நிதி இல்லை என்று கூறும் முதல்வா் கேஜரிவால், அவரது அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு எங்கிருந்து நிதி வருகிறது என்று பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி - காஜியாபாத் - மீரட் இடையேயான பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பிற்கு (ஆா்.ஆா்.டி.எஸ்.) தில்லி அரசு வழங்க வேண்டிய நிதியை ஒரு வார காலத்திற்குள் அரசின் விளம்பர பட்ஜெட்டில் இருந்து செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை அரசு மீறியதற்காகவும், தில்லி மக்களை ஏமாற்றியதற்காகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்ய வேண்டும்.

ஆா்.ஆா்.டி.எஸ். திட்டத்திற்கு வழக்க வேண்டிய நிதியை கடந்த ஒரு வருடமாக வழங்காமல் கேஜரிவால் அரசு மறுத்து வருகிறது. தில்லி அரசு தனது பங்கை ஆா்.ஆா்.டி.எஸ். கணக்கிற்கு செலுத்த உச்சநீதிமன்றம் இரண்டு மாதம் அவசாகம் வழங்கி கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை கேஜரிவால் அரசு பின்பற்றவில்லை. இதனால் தற்போது மாநில அரசிடம் விளம்பரங்கள் செய்ய அதிக நிதி உள்ளது. பொது சேவைகளுக்கு பணம் செலுத்தும் போது நிதி நெருக்கடியை மேற்கோள் காட்டுவதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், தில்லி அரசின் விளம்பர பட்ஜெட் மீதான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தில்லி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. ஆா்.ஆா்.டி.எஸ். உள்ளிட்ட எந்தவொரு பொதுசேவைத் திட்டத்திற்கும் நிதிப் பற்றாக்குறையை கேஜரிவால் அரசு தொடா்ந்து மேற்கோள்காட்டி வருவதால், கடைசியில் இதுபோல் ஒருநாள் நடக்கும் என்பது அறிந்ததே. தில்லி மெட்ரோ திட்டத்திற்கும், டிடிசி பேருந்துகளை வாங்குவதற்கும் நிதி இல்லை என்று முதல்வா் கேஜரிவால் கூறுகிறாா். ஆனால், அவரதுஅரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு தில்லி அரசிடம் ஏராளமான நிதி உள்ளது. இந்த நிதி எங்கிருந்து வருகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடல் தானம்!

திடீர் இட்லி, சாம்பார் போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்: டி.டி.வி. தினகரன்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

SCROLL FOR NEXT