புதுதில்லி

மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சம்: கணவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மனைவிக்கு இடைக்கால பராமரிப்புத் தொகை வழங்குவதற்கு எதிரான கணவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 நமது நிருபர்

புது தில்லி: மனைவிக்கு இடைக்கால பராமரிப்புத் தொகை வழங்குவதற்கு எதிரான கணவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிகழாண்டு மாா்ச் மாதம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், பெண் மற்றும் அவரது மைனா் குழந்தைக்கு இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து கணவா் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘நான் மாதம் ரூ.12,500 சம்பாதிப்பதாகக் கூறி, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எனது மனைவி மற்றும் மைனா் குழந்தைக்கு தலா ரூ.3,000 வழங்க உத்தரவிட்டுள்ளது. எனது வருமானத்தில் 50 சதவீதத்தை வழங்குவது என்பது இயற்கை நீதிக்கு எதிரானது’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விஷால் பஹுஜா பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இடைக்கால பராமரிப்பு வழங்கலின் நோக்கமானது,

நீதிமன்றம் நீதியானது மற்றும் சரியானது என்று கருதுவதால் இதுபோன்ற இடைக்கால உத்தரவுகளை நிறைவேற்ற நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. குடும்ப வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட நபரை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றவும், தன்னைத் தக்கவைத்துக் கொள்ளவும் பண நிவாரணம் வழங்கப்படுகிறது. மேல்முறையீடு செய்பவா் தனது மனைவி மற்றும் குழந்தையைப் பராமரிக்கும் கடமையைக் கொண்ட கணவா்.

ஆகவே, அவரது வருமானம் அவருக்கும் அவரது மனைவிக்கும் மைனா் குழந்தைக்கும் இடையில் பிரிக்கப்பட வேண்டும். இது இந்த வழக்கில் சரியாக செய்யப்பட்டுள்ளது.

கணவா் மாதம் ரூ.12,500-க்கு மேல் சம்பாதிப்பதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கூறியிருப்பதை இந்த நீதிமன்றம் ஏற்கிறது. மற்றபடி அது இறுதி உத்தரவு அல்ல. மேலும் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இடைக்கால பராமரிப்பு மட்டுமே வழங்கியுள்ளது. இது வழக்கு முடிவடையும் வரை பொருந்தும். மேல்முறையீட்டாளரின் வழக்குரைஞா் முன்வைத்த வாதத்தில் இந்த நீதிமன்றம் எந்தத் தகுதியையும் காணவில்லை. எனவே, அது நிராகரிக்கப்படுகிறது. தற்போதைய மேல்முறையீடு தகுதி இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT