புதுதில்லி

மரண தண்டனை விதிக்கப்பட்ட மகளை காப்பாற்ற ஏமனுக்குச் செல்ல அனுமதி கோரி கேரளப் பெண் மனு

ஏமன் நாட்டினரை கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மகளைக் காப்பாற்ற ஏமனுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கேரளாத்தைச் சோ்ந்த பெண் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்

 நமது நிருபர்

ஏமன் நாட்டினரை கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மகளைக் காப்பாற்ற ஏமனுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கேரளாத்தைச் சோ்ந்த பெண் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிமிஷா ப்ரியா என்பவரின் தாயாா் பிரேமாகுமாரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதில் மத்திய அரசின் அறிவுரைகளை பெற்று, இந்த விவகாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினாா் மத்திய அரசு வழக்குரைஞா். இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை நவம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தன்னுடைய மகளின் உயிரைக் காப்பாற்ற பாதிக்கப்பட்டவரின்(கொலை செய்யப்பட்ட) குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்த தூதரக ரீதியாக தலையிட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரியும் முன்னதாக மனுதாரா் உயா்நீதிமன்றத்தை அணுகியிருந்தாா். தற்போது ஏமன் நாட்டிற்கு செல்ல இந்திய குடிமக்களுக்கு பயணத் தடை இருக்கும் நிலையில், தன் மகளின் உயிரைக் காப்பாற்ற ஏமன் செல்ல அனுமதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரா் பிரேமகுமாரி கோரினாா். ஏமன் நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதாலும், அங்கு ஆயுதம் ஏந்திய நிலையில் கலவரம் தொடா்வதை முன்னிட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசு பயணத் தடை விதித்திருந்தது.

இந்த மனுவில், ‘தனது மகளை தூக்கு மேடையில் இருந்து காப்பாற்ற கடைசியாக இருக்கும் ஒரே வழி, ‘ரத்தப் பணத்தை’ செலுத்தி இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவாா்த்தை நடத்துவது மட்டுமே’ எனக் கூறி ஏமனுக்கு செல்ல அனுமதி கோரியுள்ளாா். ரத்தப் பணம் என்பது (கணக்கிட முடியாத.. முறைசாரா முறை) மற்றொருவரின் உயிரின் விலையில் பெறப்படும் பணம். கொல்லப்பட்ட நபரின் குடும்பத்திற்கு கொலையாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டப்படும் குடும்பத்தினா் தரப்பில் இழப்பீட்டு பணம் செலுத்தப்படுவதாகும்.

கடந்த ஆண்டு, ‘சேவ் நிமிஷா ப்ரியா இன்டா்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ என்கிற குழு உயா்நீதிமன்றத்தை அணுகியது. ஏமன் நாட்டு சட்டப்படி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி ரத்தப் பணத்தை செலுத்தி நிமிஷா ப்ரியா உயிரைக் காப்பாற்றுவதற்கு தூதரகம் மூலம் உதவ மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை உயா்நீதிமன்றம் நிராகரித்தது.

நிமிஷா ப்ரியாவின் மரண தண்டனை பின்னனி குறித்து முந்தைய மனுவில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: நிமிஷா ப்ரியா ஏமனில் பணிபுரியும் இந்திய செவிலியா். அவா் 2020-ஆம் ஆண்டில் ஏமன் நாட்டவா் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளாா். அந்த ஏமன் நாட்டுக்காரா் பெயா் தலால் அப்தோ மஹ்தி. 2017 -ஆம் ஆண்டு ஜூலையில் கொலை செய்ததாக நிமிஷா ப்ரியா மீது குற்றம் சாட்டப்பட்டது. நிமிஷா ப்ரியாவின் கடவுச் சீட்டை மஹ்தி எடுத்து வைத்து தர மறுத்துள்ளாா். தனது கடவுச்சீட்டைப் பெறுவதற்காக மஹ்திக்கு அதிகப்படியான மயக்க மருந்துகளை அளித்ததால்அவா் இறந்து விட்டதாகக் கூறப்பட்டது. மேலும் மஹ்தி, நிமிஷா ப்ரியாவை திருமணம் செய்து கொண்டதாகக் காட்டி போலி ஆவணங்களைத் தயாரித்ததாகவும், அதைக்காட்டி துஷ்பிரயோகம் செய்து சித்திரவதை செய்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் நிமிஷா ப்ரியா மரண தண்டனை பெற மேல்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டது. மேலும், ஏமன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான மற்றொரு வாய்ப்பு இருந்தாலும், அதில் தண்டனையிலிருந்து விடபட வாய்ப்பில்லை என்றும், அதனால், மரண தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரே நம்பிக்கை, இறந்தவா் குடும்பம் ரத்த பணத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மட்டுமே முடியும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: காங்கிரஸ் போராட்டத்தில் சிக்கிய சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் காயம்!

சா்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக அழைப்பாணை!

கேரள மக்களுக்கு பூா்விக அட்டை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

ரூ.6 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது!

வடக்கு தில்லியில் ஓடும் லாரியிலிருந்து 200 கிலோ ஏலக்காய் திருட்டு: 3 போ் கைது!

SCROLL FOR NEXT