புதுதில்லி

ஏப்ரல்-ஆகஸ்டில் ஏற்றம் கண்ட நிலக்கரி விநியோகம்

நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் மின் உற்பத்தித் துறைக்கான நிலக்கரி விநியோகம் 5.8 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

DIN

நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் மின் உற்பத்தித் துறைக்கான நிலக்கரி விநியோகம் 5.8 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் மின் உற்பத்திக்காக 32.45 கோடி டன் நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் இது 5.8 சதவீதம் அதிகமாகும். அப்போது நிலக்கரி உற்பத்தி நிறுவனங்கள் அனல் மின் நிலையங்களுக்கு 30.67 கோடி டன் நிலக்கரியை விநியோகித்திருந்தன.

ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள் மற்றும் போக்குவரத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி இருப்பு 8.6 கோடி டன்னாக இருந்தது. இது ஓராண்டுக்கு முன் 2022 ஆகஸ்ட் 31-இல் 6.88 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலக்கரி கையிருப்பு 25 சதவீதம் அதிகமாகும்.

2023 ஏப்ரல்-ஆகஸ்ட் மாதத்தில் அனல் மின் உற்பத்தி 6.58 சதவீதம் அதிகரித்து 51,734 கோடி யூனிட்டுகளாக உள்ளது. இது, கடந்த 2022-ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 48,542 கோடி யூனிட்டுகளாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT