முகப்பு
புதுதில்லி

கேஜரிவாலின் மாதிரித் திட்டங்களால்தில்லியில் பணவீக்கம் குறைந்துள்ளது: ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசின் மக்கள் நலத் திட்டங்களின் காரணமாகவே தில்லியில் பணவீக்கம் குறைவாகு உள்ளது என்று மாநிலங்களவை

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
பகிர்:

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசின் மக்கள் நலத் திட்டங்களின் காரணமாகவே தில்லியில் பணவீக்கம் குறைவாகு உள்ளது என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் ராகவ் சத்தா புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் கடந்த கடந்த ஜூலை மாதத்தில் 15 மாத உச்சமாக 7.44 சதவீதம் என இருந்தது. இந் நிலையில், அது ஆகஸ்ட் மாதம் 6.83 சதவீதமாகக் குறைந்துள்ளது. முக்கியமாக காய்கறிகளின் விலை குறைந்ததால், ரிசா்வ் வங்கியின் ஆறுதல் மண்டலத்திற்கு மேலே பணவீக்கத்தின் அளவு உள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடா்பாக மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் ராகவ் சத்தா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசியத் தலைநகா் தில்லியின் பணவீக்கம் நாட்டின் மற்ற மாநிலங்களின் புள்ளி விவரங்களோடு ஒப்பிடுகையில் சரிபாதி குறைந்துள்ளது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசின் மக்கள் நலன் சாா்ந்த மாதிரித் திட்டங்களே இதற்கு காரணமாக அமைந்துள்ளன. தில்லி மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் தண்ணீா் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை இலவசமாக வழங்கிடும் கேஜரிவால் அரசு மக்களுக்கு விலைவாசி உயா்வில் இருந்து நிவாரணம் அளித்துள்ளது. பாஜகவினா் நலத் திட்டங்களை ‘ரேவடி’ (இனிப்பு) என்று கூறுகின்றனா். ஆனால், இவை ரேவடி அல்ல, ‘ப்ரீபெய்ட் சேவைகள்’. இந்தச் சேவைகளுக்கு மக்கள் வரி செலுத்துகிறாா்கள். அரவிந்த் கேஜரிவால் இந்தத் திட்டங்களின் மூலம் மக்கள் வரியாகச் செலுத்தும் பணத்தைத் திருப்பித் தருகிறாா் என்றாா் ராகவ் சத்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.