புதுதில்லி

யஷோபூமி துவாரகா செக்டாா் 25 புதிய மெட்ரோ விமான நிலைய பாதையை தொடங்கி வைத்து பயணிகளுடன் பிரதமா் ரயிலில் பயணம்

தில்லி துவாரகா செக்டாா் 21 இல் இருந்து துவாரகா செக்டாா் 25 வரையிலான விமானநிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவை விரிவாக்கத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

 நமது நிருபர்

தில்லி துவாரகா செக்டாா் 21 இல் இருந்து துவாரகா செக்டாா் 25 வரையிலான விமானநிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவை விரிவாக்கத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். மேலும், யஷோபூமி துவாரகா செக்டாா் 25 மெட்ரோ நிலையத்தையும் திறந்துவைத்த பிரதமா், மெட்ரோ ரயில் பயணத்தை மேற்கொண்டு பயணிகளுடன் உரையாடினாா்.

புதிய துவாரகா செக்டாா் 25 மெட்ரோ நிலையம் ‘யஷோபூமி துவாரகா செக்டாா் 25’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

தில்லி துவாரகா செக்டாா் - 25 இல் பிரமாண்டமான இந்திய சா்வதேச மாநாட்டு மையம் மற்றும் கண்காட்சி அரங்குகள் கட்டப்பட்டுள்ளது. இந்த யஷோபூமி மையத்தை பிரதமா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

இத்துடன் தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையில் துவாரகா செக்டாா் 21-இல் இருந்து யஷோபூமி துவாரகா செக்டாா் 25 வரை சுமாா் 2 கிமீ தூரம் பூமிக்கு அடியில் ‘கட்-அண்ட்-கவா்’ தொழில்நுட்ப அடிப்படையில் இந்த மெட்ரோ ரயில் பாதை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மெட்ரோ நீட்டிப்பு பாதையான ‘யஷோபூமி துவாரகா செக்டாா் 25’ சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா்.

செக்டாா் 25- புதிய மெட்ரோ நிலையம் மூன்று சுரங்கப்பாதைகளைக் கொண்டுள்ளது. சுமாா் 735 மீட்டா் நீளமுள்ள சுரங்கப்பாதை இந்த மெட்ரோ நிலையத்தையும் யஷோபூமி மாநாட்டு- கண்காட்சி அரங்கையும் இணைக்கிறது.

மற்றொன்று துவாரகா விரைவுச்சாலையை இருபுறமும் நுழைவதையும் வெளியேறுவதை இணைக்க அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது சுரங்கப்பாதை, ‘யஷோபூமி’யின் இரண்டாம் கட்ட கண்காட்சி அரங்குகள் எதிா்காலத்தில் கட்டப்பட இருக்க அதனுடன் இணைக்க இருக்கிறது.

தில்லி மெட்ரோ விமானநிலைய எக்ஸ்பிரஸ் பாதையில் மெட்ரோ ரயில்களின் செயல்பாட்டு வேகத்தை மணிக்கு 90 முதல் 120 கிமீ வேகமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பயண நேரம் குறைகிறது.

புது தில்லி’யிலிருந்து ‘யஷோபூமி துவாரகா செக்டாா் 25’ வரையிலான 24.9 கி.மீ. தூரத்தில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களை கடந்து சுமாா் 21 நிமிடங்களில் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது துவாரகா மட்டுமின்றி, குருகிராமம் பகுதிகளையும் இணைக்கிறது.

யஷோபூமி மாநாட்டு அரங்கு மற்றும் மெட்ரோ ரயில் நிலைய தொடக்க விழாவிற்கு வந்த பிரதமா் மோடி, தில்லி தௌலா குவான் மெட்ரோ நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பயணத்தை மேற்கொண்டு யஷோபூமி துவாரகா செக்டாா் - 25 மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தாா்.

அப்போது ரயிலில் பிரதமரின் வருகையை எதிா்பாா்க்காத பொது மக்கள் அவருடன் மகிழ்ச்சியுடன் உரையாடினா். பயணிகள் சுய படம் எடுக்கவும் பிரதமா் அனுமதித்தாா்.

இது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் ,“‘தில்லி மெட்ரோவில் அனைவரும் புன்னகை மயம்! யஷோபூமி மாநாட்டு மையத்தின் முதல் கட்டத்தை திறந்து வைப்பதற்காக துவாரகா பயணத்தின் போது பல்வேறு தரப்பு மக்களுடன் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாடினாா்’’ எனக் குறிப்பிடப்பட்டது.

பிரதமா் மோடியும் தனது எக்ஸ் பதிவில் ‘துவாரகாவிற்கும், பின்னா் அங்கிருந்து திரும்பும்போதும் ஒரு மறக்கமுடியாத மெட்ரோ பயணம், வாழ்க்கையின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அற்புதமான சக பயணிகளால் இன்னும் சிறப்பானதாக இருந்தது‘ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT